இந்தியாவை வீழ்த்தி மீண்டும் கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலியா ..!

மகளிர் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி இன்று  ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் மைதானத்தில் நடைபெற்றது.  இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்துஇதைத்தொடந்து இறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் அடித்து இந்தியாவுக்கு ஒரு பெரிய இலக்கை நிர்ணயித்தது.

இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய தொடக்க வீராங்கனைகள்  அலிஸா ஹீலி (75) மற்றும் பெத் மூனி (78*) ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் தீப்தி சர்மா 2 விக்கெட்டை வீழ்த்தினார். 

பின்னர் களமிறங்கி இந்திய அணி தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா 2 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 11 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் தனியா பாட்டியா காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார்.

பின்னர்  ஜெமிமா ரோட்ரிக்ஸ் ரன் ஏதும் அடிக்காமலும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 4 ரன்களில் வெளியேற இந்திய அணி  பரிதாபமான நிலையில் இருந்தபோது மத்தியில் இறங்கிய தீப்தி சர்மா, வேத கிருஷ்ணமூர்த்தி நிதானமாக விளையாடினர். 

சிறப்பாக விளையாடிய  தீப்தி சர்மா (33) ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் அடுத்தடுத்து இறங்கிய அனைத்து வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக இந்திய அணி  19.1 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 85 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது . மேலும் ஆஸ்திரேலியா அணி  5 முறையாக கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan