மக்கள் விரும்பாத எந்த திட்டமும் செயல்படுத்தபடக் கூடாது.! உணவுத்துறை அமைச்சர் பேச்சு.!

  • தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக அரசியல் கட்சிகளின் தலைவர்கள், விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
  • திருவாரூரில் சாலை பாதுகாப்புவார விழிப்புணர்வு பேரணியில் அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டு, மக்கள் விரும்பாத எந்த திட்டமும் செயல்படுத்தபடக்கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று கூறினார்

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகவும் , ஒ.என்.ஜி.சி நிறுவனம் விளை நிலங்களில் குழாய் பதிக்கக்கூடாது எனவும் அப்படி குழாய் பதிப்பதனால் விளை நிலங்கள் பெரிதும் பாதிக்கப்படும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழகத்தில் பொதுமக்களும், விவசாயிகளும் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஹைட்ரோகார்பன் ஆய்வு கிணறு அமைப்பதற்க்கு மத்திய அரசு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை சம்பந்தப்பட்ட நிறுவனம் பெற வேண்டியது கட்டாயம் இல்லை எனவும் , மேலும் அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்த தேவையில்லை எனவும் மத்திய அரசு கூறியது.

இந்த உத்தரவிற்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள், விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் அதிமுக அரசு ஆதரிக்காது என கூறி இருந்தார். ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம்எழுதிருந்தார். அந்த கடிதத்தில் டெல்டா பகுதி மக்களின் கருத்தை கேட்காமல் ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்ப்படுத்தக்கூடாது என்று குறிப்பிட்டுருந்தது.

இந்நிலையில், திருவாரூரில், சாலை பாதுகாப்புவார விழாவை ஒட்டி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டு, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்பட மக்கள் விரும்பாத எந்த திட்டமும் செயல்படுத்தபடக் கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று கூறினார். மேலும் கூறுகையில், தந்தை பெரியார் குறித்தம், ரஜினியின் கருத்து குறித்த கேள்விக்கு, தேவையில்லாத கருத்துகள் கூறுவதை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்