குழந்தைகளுக்கு இதெல்லாம் மன அழுத்தை ஏற்படுத்துமாம்

குழந்தைகள் என்பவர்கள் மிகவும் மென்மையானவர்கள் அவர்களையும் மனஅழுத்தம் எனும் கொடிய நோய் தாக்குகிறது என்பதில் சந்தேகமே இல்லை.சில குழந்தைகள் அதிகமாக யாரிடமும் பழக மாட்டார்கள் அதுவும் ஒரு விதமான மனஅழுத்தம் தான் என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.

அவர்கள் சுறுசுறுப்பாக இருக்காமல் இருப்பதற்கும் மனஅழுத்தம் ஒரு முக்கிய காரணமாகும். எனவே அவர்களை மனஅழுத்தம் பாதிக்காமல் இருக்க நாம் அவர்களை கவனமாக பாதுகாக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு  மன அழுத்தத்தை உருவாகுவதற்கான  காரணங்கள் :

குழந்தைகள் மனஅழுத்தத்தை  அதிகரிக்க பல காரணிகள் உள்ளது. குழந்தைகள் மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களின் நடை முறைகளில் பல மாற்றங்களை நாம் பார்க்கலாம். குழந்தைகளின் மனஅழுத்தத்தை பாதிக்கும் காரணிகளை இந்த பதிப்பில் இருந்து படித்தறிவோம்.

அன்பு கிடைக்காமை :

 

 

வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் அநேகம் பேர்  குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்துவதில்லை. குழந்தைகள் என்ன செய்கிறார்கள் எப்போது பள்ளியில் இருந்து வருகிறார்கள்.அவர்களுக்கு என்ன வேண்டும், சாப்பிட்டார்களா என்று கூட கேட்பதில்லை.குழந்தைகளை பார்த்து கொள்வதற்கு பணிப்பெண்ணை நியமித்துவிடுகிறார்கள்.

குழந்தை இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இதனால் குழந்தை மிகவும் அன்பிற்காக ஏங்குகிறார்கள்.இந்த இடத்தில் குழந்தைகள் மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

தோல்விகளை சந்திப்பது :

 

குழந்தைகளால் தோல்வியை ஏற்று கொள்ள முடியாது.தோல்வியை அவர்கள் ஏற்று கொள்ள மிகவும் சிரமப்படுவார்கள்.தேர்வில் தொடர்ந்து தோல்விகளை சந்திப்பதாலும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடலாம்.

மேலும் அவர்களால் ஏதேனும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு தோல்வியை சந்திக்கும் போது பலர் கேலி செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் குழந்தைகளுக்கு மனஅழுத்தம் ஏற்பட்டு சில சமயங்களில் போட்டியில் கலந்து கொள்வதை விரும்பமாட்டார்கள்.

குழந்தைகளை தவறாக பயன்படுத்துதல் :

 

 

குழந்தைகளை சிலர் தவறாக பயன்படுத்துவதும் அவர்களுக்கு மிக பெரிய மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். அன்பிற்காக ஏங்கும் குழந்தைகளை சில தவறாக பயன்படுத்துவதால் குழந்தைகள் பயந்து இதனை வெளியில் சொல்லலாமா வேண்டாமா எனப்பல மன அழுத்தங்களுக்கு ஆளாக நேரிடும். இவ்வாறு தொடர்ந்து பல பிரச்சனைகளுக்கு ஆளாகும் போது குழந்தைகள் எதற்கு எடுத்தாலும் பயப்பட ஆரம்பித்து விடுவார்கள்.

குடும்பத்தில் சண்டை :

 

குழந்தைகள் இருக்கும் வீடுகளில் பெற்றோர்கள் அதிகம் குழந்தைகளுக்கு முன்னால் சண்டை போட்டு கொள்வது, குழந்தைகளின் சந்தோசத்தை முற்றிலும் அழித்து விடும்.

 

 

இவ்வாறு அடிக்கடி பெற்றோர்கள் அடிக்கடி சண்டை போட்டு கொள்ளுவதால் அது குழந்தைகளின் மனநலனை பாதிக்கும். மேலும் குழந்தைகளின் முன்பு கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தினாலும் அவர்களின் மனம் பாதிப்படையும்.

பாலின வேறுபாடு:

 

பெற்றோர்கள் பலர் ஆண் குழந்தை ,பெண்குழந்தை என வேறுபாடு பார்த்து பார்ப்பது குழந்தைகளிடையே பிரிவினையை ஏற்படுத்தும்.

அநேகம் பேர் ஆண்குழந்தைக்கு சாப்பாட்டில் இருந்து சகல பொருள்களையும் கேட்டவுடன் வாங்கி கொடுக்கிறார்கள். சிலர் பெண்குழந்தைகள் தானே பிறகு வாங்கி கொடுத்து விடலாம் என்று அலட்சியமாக நினைப்பது குழந்தைகளுக்குள் மிக பெரிய பிரிவினையை ஏற்படுத்தி விடும். இது நாளடைவில் குழந்தைகளுக்குள்  சகோதர பாசம் இல்லாமல் போய்விட ஒரு காரணியாக அமைந்து விடும்.

மேலும் இந்த பிரச்சனையினால் பல குழந்தைகள் இன்று வரைக்கும் பாதிக்க பட்டு வருகிறார்கள்.இதனாலும் குழந்தைகள் மிக பெரிய மனஅழுத்தத்தை  சந்திக்க நேரிடும்.

மற்றவர்களுடன் ஓப்பிடுதல்  :

 

ஒரு குழந்தையின் திறமையை மற்ற குழந்தைகளின் திறமைகளுடன் ஓப்பிடுவது மிக பெரிய மனஅழுத்தத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்தி விடும்.

பொது இடங்களில் கண்டிப்பது:

 

குழந்தைகளை பொது இடங்களில் வைத்து கண்டிப்பதால் அவர்களின் மனம் பெரிதும் காயப்படும்.இதுவும் குழந்தைகளுக்கு மன அழுத்தம்  ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாக அமைகிறது.

Leave a Comment