திருமணம் நிச்சயமான பெண்கள் முக்கியமாக எண்ணிப்பார்க்கும் 6 விஷயங்கள்!

திருமணம் எனும் விஷயத்தில் அதிக தியாகங்களை புரிவது பெண்ணினம் தான்; பெண்கள் திருமணத்திற்கு பிறகு தங்கள் பிறந்து, வளர்ந்து – வாழ்ந்து வந்த வீட்டை விட்டு, உறவுகளை விட்டு, உடன் இருந்த மக்களை விட்டு முற்றிலும் புது இடமான கணவனின் இல்லத்திற்கு செல்ல வேண்டும்; அங்கிருக்கும் பழக்கங்களை, உறவுகளை ஏற்று அனுசரித்து நடந்து தன்னுடையதாய் ஏற்று வாழ்தல் வேண்டும்.

இத்தகைய மாற்றங்களை சந்திக்க இருக்கும் – திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்கள் பல விஷயங்களை குறித்து சிந்திப்பதும், பற்பல விஷயங்களை குறித்து கவலை கொண்டும் இருப்பர்; இந்த பதிப்பின் வாயிலாக திருமணம் நிச்சயமான பெண்கள் முக்கியமாக எண்ணிப்பார்க்கும் 6 விஷயங்கள் என்னென்ன என்பதை அறியலாம்.

பெற்றோரின் பிரிவு

பெற்றோரை பிரிந்து வேறு இல்லத்திற்கு செல்லப்போகும் கவலை, திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிமிடமே பெண்களின் மனதில் தோன்றிவிடும். இந்தக்கவலை பெரும்பாலும் எல்லா பெண்களும் மனதில் எண்ணி துயருறும் விஷயமே!

திருமணம் முடிந்து பல காலங்களுக்கு இக்கவலை பெண்களின் மனதில் நிலைத்திருக்கும்.

பண விஷயம்

திருமணத்திற்கு பெற்றோர் பணம் செலவழிக்க வேண்டி வருமே, அவ்வளவு பணம் அவர்களிடம் இருக்குமா என்ற கவலை ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்களின் மனதில் கட்டாயம் நிலைத்து இருக்கும்.

இதை பற்றி திருமணம் நிச்சயமான பெண்கள் முக்கியமாக பலமுறை சிந்தித்து பார்த்து வருந்துவர்.

கல்யாண வேலைகள்

உடன்பிறந்தோர் – உறவுகள் குறைவாக இருந்தால், அப்படிப்பட்ட குடும்பத்தை சார்ந்த பெண்கள் தங்களது கல்யாண வேலைகளை குறித்தும், பெற்றோர் மற்றும் தான் அதற்காக பாடுபடுவது குறித்தும் பெண்கள் அதிகம் எண்ணிப்பார்த்து கவலையுறுவர்.

இரு குடும்பங்கள்

தனது மற்றும் தனக்கு கணவராக போகும் நபரின் குடும்பம் என இரு குடும்பங்களும் தங்களுக்குள் சரியான புரிதலை கொள்ள வேண்டும்; எந்த ஒரு பிரச்சனையும் அவர்களுக்குள் நேரக்கூடாது என பெண்கள் அதிகம் எண்ணி வருந்தி வேண்டிக்கொள்வதுண்டு.

வரப்போகும் வரன்!

தனக்கு வரப்போகும் வரன் எப்படிப்பட்ட நபர், அவரின் குணாதிசயம் என்ன அல்லது திருமணத்திற்கு பிறகு அவரின் குணநலன் மாறிவிடுமா என்ற சந்தேகங்கள் நிச்சயமாக திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்களின் மனதில் தோன்றி, வருத்தத்தை ஏற்படுத்தும்.

அழகு பிரச்சனை

திருமணத்தின் பொழுது தான் அழகாக இருக்க வேண்டும், ஆடை அலங்காரம் என எதிலும் எக்குறையும் இருக்கக் கூடாது என்ற கவலை பெண்கள் மணமேடை ஏறி, மற்றவர் அவர்களின் அழகை புகழும் வரை அவர்தம் மனதில் இருக்கும்.

சில சமயங்களில் திருமணத்தின் பொழுது பெண்கள் விரும்பிய வண்ணம் திருமண அலங்காரங்கள் – ஆடைகள் அமையவில்லை எனில், அவர்களின் இறுதிக்காலம் வரை இந்த வருத்தம் பெண்களின் மனதில் நிலைத்து நிற்க அதிக வாய்ப்புள்ளது.

author avatar
Soundarya

Leave a Comment