ஆதித்யா வர்மா திரைப்படத்திற்கு 'ஏ(A)' சான்று! ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா?!

தெலுங்கில் வெற்றிபெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படம் , பாலிவுட்டில் ரீமேக்காகி வெற்றிபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது தமிழில் ஆதித்யா வர்மா எனும் பெயரில் தயாராகி வருகிறது.
விக்ரம் மகன் துருவ் விக்ரம் இப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தில் பனிதா சந்து ஹீரோயினாகவும், அன்புதாசன், பிரியா பாவனிசங்கர் ஆகியோர் முக்கிய ரோலிலும் நடித்து உள்ளனர்.
இப்படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 8 என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பார்க்கும் வண்ணம் ஏ சான்று அளிக்கப்பட்டுள்ளது. இப்படம் செப்டம்பர் 21இல் வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.