இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து! க்ரைன் ஆபரேட்டர் ராஜா மீது வழக்கு பதிவு!

க்ரைன் ஆபரேட்டர் ராஜா மீது 3பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார்.  இயக்குனர்

By leena | Published: Feb 20, 2020 01:02 PM

க்ரைன் ஆபரேட்டர் ராஜா மீது 3பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார்.  இயக்குனர் சங்கர் இயக்கத்தில், நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன்-2 திரைப்படம். இதற்கான படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், பூந்தமல்லி அடுத்து நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி  சினிமா தளத்தில் படப்பிடிப்பை நடத்துவதற்கு, செட் அமைக்கும்  பணி நடைபெற்று வந்தது. இந்த செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் உயிரிழந்துள்ளதாகும் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனையடுத்து, இந்த விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் ராஜன் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக இருக்கும் ராஜனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc