பீர் குடித்துவிட்டு குழந்தை அருகில் படுத்திருந்தது குற்றமல்ல.! 20 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்.!

குழந்தை அருகில் தாய் பீர் அருந்தி படுத்திருப்பது குற்றமல்ல. இந்த மரணம் அஜாக்கிரதையாக நடைபெற்றதே என கூறி மூரியல் மாரிசன் என்கிற பெண்மணியின் 20 ஆண்டுகால சிறை தண்டனையை ரத்து செய்தது அமெரிக்க நீதிமன்றம்.

அமெரிக்காவில் உள்ள மேரிலேண்ட் பகுதியில் கடந்த 2014ஆம் ஆண்டு மூரியல் மாரிசன் என்கிற பெண்மணி தனது 4 மாத குழந்தையுடன் தன் வீட்டில் உறங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது அவர் பீர் குடித்துவிட்டு குழந்தை அருகிலேயே படுத்துறங்கியுள்ளார். அவர் காலையில் கண்விழித்து பார்க்கையில் குழந்தை இறந்து கிடந்துள்ளது.

இதனை அறிந்த காவல்துறையினர், பீர் குடித்துவிட்டு குழந்தை அருகில் படுத்திருந்ததாலே குழந்தை இறந்துள்ளது என மூரியல் மாரிசன் மீது குற்றம் சாட்டினார். இதன் காரணமாக நீதிமன்றம் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது.

இதனை எதிர்த்து அந்த பெண் வேறு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், குழந்தை அருகில் தாய் பீர் அருந்தி படுத்திருப்பது குற்றமல்ல. இந்த மரணம் அஜாக்கிரதையாக நடைபெற்றதே. இது விபத்து ஆகும். ஒரு தாய் தன் குழந்தையை வேண்டுமென்றே கொல்ல நினைக்க மாட்டார். என மேரிலேண்ட் நீதிமன்றம் தீர்ப்பளித்து மூரியல் மாரிசனை விடுதலை செய்துவிட்டது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.