ரயில்வே நிலையத்தில் தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண்-பாராட்டும் பொதுமக்கள்

  • இளம்பெண் ஒருவர் சென்னை எழும்பூர் இரயில்வே நிலைய பிளாட்பாரத்திலேயே தனக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார்.
  • அந்த பெண்ணிற்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ரேணிகுண்டா அருகே உள்ள பாப்பநாடுபேட்டையை சேர்ந்த தம்பதிகளான வெங்கடேஷ் – ரம்யா ஆகிய இருவரும் வேலை நிமித்தமாக சென்னை வந்துள்ளனர்.நிறைமாத கற்பிணியான ரம்யாவிற்கு 25 வயதாகிறது. இருவரும் மீண்டும் ஆந்திராவிற்கு செல்ல சென்னை எழும்பூர் இரயில்வே நிலையத்திற்கு வந்துள்ளனர் ஆனால் ஆந்திரவிற்கு அடுத்த நாள் காலையில் தான் இரயில் என்பதால் இருவரும் இரயில்வே நிலைய பிளாட்பாராத்திலேயே தங்கி விட்டனர்.

நள்ளிரவில் நிறை மாத கற்பிணியாக இருந்த ரம்யாவிற்கு திடீரென பிரசவ வழி ஏற்பட்டுள்ளது.அருகில் உறங்கி கொண்டிருந்த கணவனை எழுப்பாமல் தன்னுடைய பிரசவத்தினை தானே பார்த்துள்ளார்.சிறிதும் அஞ்சாமல் தன்னுடைய பிரசவத்தினை பார்த்த ரம்யாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.அதிகாலையில் கண் விழித்த கணவரிடம் பெண் குழந்தையை காண்பித்து மகிழ்ந்தார்.

இதனிடையே அவ்வழியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி சரோஜ்குமார்.உடனடியாக ரம்யாவை இரயில் நிலையத்தில் உள்ள அவசர சிகிச்சை மையத்தில் அனுமதித்து அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கபட்டு பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கபட்டு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிகழ்வினை ரம்யாவிடம் கேட்டறிந்த மருத்துவர்கள் ஆச்சரியபட்டது மட்டுமல்லாமல் அவரின் துணிச்சலை பாராட்டினர்.

author avatar
kavitha