இ-காமர்ஸ் நிறுவனமான டோகோபீடியாவிலிருந்து 91 மில்லியன் வாடிக்கையாளர் பதிவுகள் திருடப்பட்டது.!

இந்தோனேசியாவில்  மர்ம நபரால் தனிப்பட்ட மக்களின் சுய விவரங்கள் இணையதளம் மூலமாக திருடப்பட்டு, $ 5,000 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாம். 

இணையதள பக்கங்கள் அவசர காலங்களில் உதவியிருந்ததெல்லாம் முன்புள்ள காலங்கள் தான். ஆனால், தற்பொழுது அந்த இணையதள பக்கங்கள் மூலமாகவே பல சிக்கல்கள் உருவாகி வருகிறது. பிறரது வாங்கி கணக்குகள் மற்றும் இணையதள பக்கங்களை தங்களது கம்ப்யூட்டர் முளைகளுடன், கிரிமினல் வலையத்தளங்களுடன் சேர்ந்து திருடிவிடுகின்றனர் ஹேக்கர்கள். அதன் பிறகு சம்மந்தப்பட்ட நபர்களை மிரட்டி பணம் பறித்தல் மற்றும் தங்களுக்கு தேவையவற்றை அடைய பயன்படுத்தி கொள்கின்றனர் இந்த ஹேக்கர்கள்.

தற்பொழுதும் இந்தோனேசியாவில் இ-காமர்ஸ் தளமான டோகோபீடியாவில், 91 மில்லியன் பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை ஒருவர் ஹேக் செய்துள்ளதாக கூறப்படுகிறது.  இது குறித்து பேசிய அந்த இ – காமர்ஸ் இணையதள பொறுப்பாளர்கள், திருடப்பட்ட விவரங்கள் கொண்ட மக்களின் சமூக வலைத்தளங்களின் paasword திருடப்படாமல் இருப்பதை உறுதி செய்வதாக கூறியுள்ளனர். 

ஹேக்கிங் செய்யப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து தொடர்ந்து விசாரிப்பதாக நிறுவனம் கூறியது. மேலும்  பயனர்கள் தங்கள் paasword-டை முன்னெச்சரிக்கையாக மாற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஹேக்கர்கள் பயனர்களின் தொலைபேசி எண் மின்னஞ்சல்கள் ஆகியவற்றை திருடி டார்க்நெட்டில் $ 5,000 க்கு விற்பனை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

author avatar
Rebekal