காங்கிரஸ் கட்சியை தவிர்த்து பா.ஜனதாவிற்கு எதிரான கூட்டணி கிடையாது – தேவேகவுடா..!

 கர்நாடகாவில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது. மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜனதா 104 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையாக வந்தாலும், ஆட்சியமைக்க முடியவில்லை. பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் எடியூரப்பா முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
இதற்கிடையே காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் இடையே அமைச்சர் பொறுப்பு தொடர்பாக இழுபறி நீடிக்கிறது. கர்நாடக தேர்தல் முடிவானது பா.ஜனதாவை எதிர்க்கொள்ள வேண்டும் என்றால் அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைய வேண்டும் என்பதை காட்டுகிறது என்பது அரசியல் வல்லுநர்கள் கருத்து.
இதற்கிடையே பிராந்திய கட்சிகள் ஒன்றாக இணைந்து மூன்றாவது அணி என்ற நகர்வை நோக்கி செல்கிறது. காங்கிரஸ் கர்நாடகாவில் நடந்து கொண்டது போன்று, பிராந்திய கட்சிகளுடன் இணைக்கமாக செயல்பட வேண்டும் எனவும் கூறப்படுகிறது.
மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைவதற்கு பாடமாக அமைந்து உள்ளது. இந்நிலையில்
காங்கிரஸ் கட்சியை தவிர்த்து பா.ஜனதாவிற்கு எதிரான கூட்டணியை உருவாக்க முடியாது என தேவேகவுடா கூறிஉள்ளார்.
தி இந்து பத்திரிக்கைக்கு பேட்டியளித்து பேசிய மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவேகவுடாவிடம், காங்கிரஸ் இல்லாது பா.ஜனதாவிற்கு எதிரான கூட்டணி சாத்தியமானதா? என கேள்வி எழுப்பட்டு உள்ளது. நேர்மையான முறையில் பதிலளிக்கிறேன், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஆட்சியமைக்கும் நிலையில், காங்கிரஸை தவிர்த்து பா.ஜனதா எதிர்ப்பு அணியை உருவாக்குவது சாத்தியம் கிடையாது என்றுதான் நினைக்கிறேன்.
இந்தியா முழுவதும் இருக்கும் கட்சி என்ற முறையில் காங்கிரஸ் முதன்மையிடத்தில் நிற்கும். தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை வென்றால் மோடி மற்றும் பாரதீய ஜனதாவிற்கு எதிரான கூட்டணி இயற்கையாகவே அமைந்துவிடும், இவ்விவகாரத்தில் எந்தஒரு நகர்விலும் என்னுடைய தலையீடு என்பது இருக்காது என்பதையும் தெளிவு செய்கிறேன்,” என கூறிஉள்ளார்.
கர்நாடக அரசியல் நாடகங்கள் தொடர்பாக பேசியுள்ள தேவேகவுடா, குதிரை பேரத்தை ஒடுக்கி ஜனநாயக மாண்பை உயர்த்திப் பிடிக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது என குறிப்பிட்டு உள்ளார்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment