“டாங்கிகள் மற்றும் ஏவுகணைகள்” தனியாக ஒரு நாட்டை காப்பாற்ற முடியாது. :அஹ்சான் இக்பால் 

பாகிஸ்தான்  உள்துறை  மற்றும் திட்டமிடல்  மற்றும் அபிவிருத்தி மந்திரியாக இருப்பவர்  அஹ்சான் இக்பால்  இவர்  பாகிஸ்தான் தேசிய சைபர் பாதுகாப்பு மையத்தை திறந்து வைத்து கூறியதாவது:-
அரசியல் உறுதியற்ற தன்மை காரணமாக, கடந்த காலத்தில் பொருளாதார வளர்ச்சி வாய்ப்பை பாகிஸ்தான் இழந்து விட்டது.”டாங்கிகள் மற்றும் ஏவுகணைகள்” தனியாக ஒரு நாட்டை காப்பாற்ற முடியாது.
90 இல்  இந்திய பிரதமராக இருந்த மன்மோகன் சிங் பாகிஸ்தான் சர்தாஜ் அஜீசிடம்  பொருளாதார சீர்திருத்தங்களை  கடன் வாங்கி இந்தியாவில் பயன்படுத்தினார். வங்களாதேசமும் அதே  உத்திகளை வெற்றிகரமாக பயன்படுத்தியது ஆனால் பத்தாண்டுகளாக அரசியல் ஸ்திரமின்மையின்றி இருப்பதால்  பாகிஸ்தான் தனது சொந்த திட்டங்களை பயன்படுத்த முடியவில்லை.
பாகிஸ்தானின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய  முதல் வாய்ப்பு 60 களில் வந்தது,   இரண்டாவது 90 களில்  வந்தது மற்றும் மூன்றாவது வாய்ப்பு இப்போது கதவை  தட்டுகிறது. போதும் போதும், கடந்த காலத்தை போன்று  உறுதியற்ற தன்மையை நாம் இழக்கக் கூடாது. நமக்கு பின்னால் இருந்த பல நாடுகள் இப்போது ஏன் முன்னோக்கி செல்கின்றன என்று சிந்திக்க வேண்டும்.
அமைதி,நிலைப்புத்தன்மை மற்றும்  பொருளாதார முன்னேற்றத்திற்கான தொடர்ச்சி முக்கியம். பொருளாதார ரீதியாக வலுவாக இல்லாவிட்டால் டாங்கிகள் மற்றும் ஏவுகணைகள் “தனியாக நாட்டை காப்பாற்ற முடியாது.
சீனாவின் தனிநபர் வருமானம் பாகிஸ்தானைவிட மிகக் குறைவாகவே இருந்தது. ஆனால் இப்பொழுது அதிகமாக உள்ளது. பங்களாதேஷ் வெளியுறவுக் கொள்கைகள் 33 பில்லியன் அமெரிக்க டாலர்களை பெற்று கொடுத்து உள்ளன. எத்தனை காலம் நான் மற்ற நாடுகளை பார்த்து கொண்டு இருக்க முடியும் அவற்றை முந்த வேண்டாமா?
பாகிஸ்தானிய இராணுவப் படைகள் “பெரும் தியாகங்களை செய்து உள்ளன. பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றிகரமாக போராடி உள்ளன.   தேசிய பட்ஜெட்டில் இருந்து  கிடைக்கும் நிதிகளின் காரணமாகவும் இது சாத்தியமாகியது.
பயங்கரவாதிகள் நம்மைச் சுற்றியிருந்த  ஒரு காலம் இருந்தது, ஆனால் இன்றைய அரசு அவர்களை அடைக்கி உள்ளது. இந்த வாய்ப்பை நாசப்படுத்தினால், வரலாறு மற்றும் வருங்கால தலைமுறைகள் நம்மை மன்னிக்காது
2013 ல் பாகிஸ்தான் 2 ஜி வயர்லெஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது. ஆனால் நாடு இப்போது உலகின் 5 ஜி தொழில்நுட்பத்தின் முதல் பயனாளர்களில் ஒன்றாக இருக்கிறது என்று  கூறினார்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment