கடந்த 24 மணி நேரத்தில் 514 பேர் பலி - ஸ்பெயினில் கொரோனா!

கொரோனா வைரஸின் தாக்கம் சில நாடுகளில் மிகவும் அதிகமாக உள்ளது. அதில் ஒன்றுதான்

By Fahad | Published: Apr 02 2020 12:50 PM

கொரோனா வைரஸின் தாக்கம் சில நாடுகளில் மிகவும் அதிகமாக உள்ளது. அதில் ஒன்றுதான் ஸ்பெயின் நாடு. இந்த நாட்டில் இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் பாதிப்பால் 514 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஏப்ரல் 11ஆம் தேதி வரைக்கும் ஸ்பெயினில் நெருக்கடி நிலையும் நீடிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஸ்பெயினில் 2596 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.