5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.20,000 அபராதம் – தேசிய புலனாய்வு நீதிமன்றம் தீர்ப்பு.!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக, சென்னை வளசரவாக்கத்தில் தங்கி இருந்த இலங்கையை சேர்ந்த அருண் செல்வராஜன் என்பவர் கடந்த 2013ம் ஆண்டு தேசிய புலனாய்வு சிறப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

பின்னர் வழக்கை விசாரித்த வந்த நீதிபதி செந்தூர்பாண்டி நேற்று தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அருண் செல்வராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் ரூ.20,000 அபராதமும், அவரை அவரது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் பிள்ளை ஆஜராகி வாதாடினார் என்பது குறிப்பிடப்படுகிறது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்