அமெரிக்காவில் சாலையில் தாறுமாறாக கார் ஒட்டிய 5 வயது சிறுவன்!

சாலையில் வேகமாக கார் ஓட்டி போலீசாரின் பிடியில் சிக்கிய 5 வயது சிறுவன்.

 நெடுஞ்சாலையில், அமெரிக்காவின் உட்டா மாகாண காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஒரு கார் மட்டும் சாலை விதிகளை கடைபிடிக்காமல், தாறுமாறாக சென்று கொண்டிருந்தது. இதனை உற்று கவனித்த காவல்துறையினர் வாகனத்தை மறித்து, அந்த காரை சோதனை செய்தபோது அந்த காரை 5 வயது சிறுவன் தனியாக இயக்கி வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து, அந்த சிறுவனை பிடித்த போலீசார் அவனிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த சிறுவன் தனக்காக ஒரு விலை உயர்ந்த சொகுசு காரான லம்போகினி மாடல் காரை வாங்க கலிபோர்னியாவுக்கு சென்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

சிறுவனின் இந்த பதிலை கேட்டு வியப்பில் ஆழ்ந்த காவல்துறையினர், அந்த சிறுவனிடம் நடத்திய சோதனையில் அவரிடம் இந்திய மதிப்பில் 220 ரூபாய் மட்டுமே இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக காவல்துறையினர் சிறுவனின் பெற்றோரை வரவழைத்து,  அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, சிறுவனை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிறுவன் ஓட்டி வந்த கார் அவரது பெற்றோர்கள் உடையது என்பதும், தொலைக்காட்சியைப் பார்த்து கார் ஓட்டக் கற்றுக் கொண்டதாகவும் அச்சிறுவன் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.