4 வயது குழந்தையை மது குடிக்க வைத்த கொடூர தாய்.! கள்ளக்காதலன் கைது.!

நந்தினி என்ற பெண் கணவரை பிரிந்து  தனது 4 வயது நயினாஸ்ரீ பெண் குழந்தையுடன்

By murugan | Published: Jan 22, 2020 10:19 PM

  • நந்தினி என்ற பெண் கணவரை பிரிந்து  தனது 4 வயது நயினாஸ்ரீ பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.
  • கள்ளக்காதலனுடன் மது குடித்துக் கொண்டிருக்கும் போது குழந்தையை அழுததால் நந்தினி தனது 4 வயது குழந்தையை அடித்து மது ஊற்றிக்கொடுத்து குடிக்க வைத்து உள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூரை சார்ந்தவர் நந்தினி( 27) கூலிவேலை செய்யும் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து  தனது 4 வயது நயினாஸ்ரீ என்ற பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.நந்தினிக்கு அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி  அசோக் என்பவருக்கும் தொடர்பு இருந்துவந்துள்ளது. அசோக்கிற்கு திருமணமாகவில்லை இந்நிலையில் இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இருவருக்கும் மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இருவரும் உல்லாசம் அனுபவிக்கும் முன் மது அருந்துவார்கள்  இதற்கு குழந்தை நயினாஸ்ரீ இடையூறாக  இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை இருவரும் மது குடித்துக் கொண்டிருக்கும் போது குழந்தையை நயினாஸ்ரீ அழுதுகொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த நந்தினி தனது 4 வயது குழந்தையை அடித்து மது ஊற்றிக்கொடுத்து குடிக்க சொல்லியுள்ளார்.  மது குடித்த குழந்தை ரத்தம் வாந்தி  எடுத்துள்ளது. சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை  சேர்ந்தனர்.பின்னர் மகளிர் போலீசார் நந்தினியும் ,அசோக்கையும்  பிடித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து நேற்று அசோக்கை போலீசார் கைது செய்துள்ளனர்.
Step2: Place in ads Display sections

unicc