போர்வெல் மூலம் 3 துளைகள்..! பின்னர் ரிக் இயந்திரம் ..!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் மீட்கும் பணி 69 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாறைகள் கடினமாக இருப்பதால் குழி தோண்டும் பணி தாமதமாக நடைபெற்று வருகிறது.
சிறுவன் சுர்ஜித் உள்ள ஆள்துளை கிணறு அருகில் 90 அடி ஆழத்திற்கு குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டு குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
நேற்று காலை07.10 மணி அளவில் முதல் ரிக் இயந்திரம் குழி தோண்டும் பணி தொடங்கியது. இரவு 12 மணி வரை 35 அடி மடியை மட்டுமே முதல் ரிக் இயந்திரம் குழி தோண்டியது.பின்னர் இரண்டாவது ரிக் இயந்திரம் ராமநாதபுரத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது. இந்த இயந்திரம் இயந்திரம் இரவு 12 .05 மணிக்கு தொடக்கி இன்று மதியம் ஒரு மணிவரை 10 அடி மட்டுமே துளையிடப்பட்டது.
இதனால் 2 ரிக் இயந்திரம் மூலமாக 45 அடி மட்டுமே துளையிடப்பட்ட இருந்த நிலையில் தற்போது கடினமான பாறைகளை உடைக்க போர்வெல் இயந்திரம் மூலம் துளையிடும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு மீட்டர் அகலத்திற்கு போர்வெல்  மூலம் மூன்று துளைகள் இட முடிவு செய்துள்ளனர். பின்னர் ரிக் இயந்திரம் மூலமாக மீண்டும் துளையிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

author avatar
murugan