#2019 RECAP: சிறப்பு அந்தஸ்து ரத்து.! காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசமாக பிரிப்பு .!

  • காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.இதற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்தார்.
  • காஷ்மீர் மறுவரையரை சட்டம் கடந்த அக்டோபர் 31 முதல் அமலுக்கு வந்தது .

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.மேலும் காஷ்மீர்  மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது .பின்னர் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.இதற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்தார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்த நிலையில்,காஷ்மீர் மறுவரையரை சட்டம் கடந்த அக்டோபர் 31 முதல் அமலுக்கு வந்தது .அக்டோபர் 31 -ஆம் தேதி முதல் ஜம்மு-காஷ்மீர் தனி யூனியனாகவும், லடாக் தனி யூனியனாகவும் செயல்பட்டு வருகிறது.

ஜம்மு காஷ்மீருக்கு கிரிஷ் சந்திரா மர்மு, லடாக்கிற்கு ஆர்.கே. மாத்தூர் ஆகியோர் துணை நிலை ஆளுநர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதனையடுத்து இந்த இரண்டு யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

மேலும் காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக உதயமாகியதால் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 28 -ஆக குறைந்துள்ளது.யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 7 -லிருந்து 9 -ஆக உயர்ந்துள்ளது.

author avatar
murugan