தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!

கடந்த சில மாதங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நோயானது, முதலில் சீனாவில்

By leena | Published: Mar 21, 2020 02:56 PM

கடந்த சில மாதங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நோயானது, முதலில் சீனாவில் பரவி, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய நிலையில், தற்போது மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இதுகுறித்து, பல நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இந்த கொரோனாவால், அனைத்து பள்ளி கல்லூரிகள், வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் அணைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது புதுச்சேரியிலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பேசிய அமைச்சர் கமலக்கண்ணன், '10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கும் தமிழக அரசின் உத்தரவு புதுச்சேரிக்கும் பொருந்தும் என்றும், தமிழக அரசின் பாடத்திட்டத்தையே புதுச்சேரி அரசும் பின்பற்றுகிறது.' என கூறியுள்ளார். 

Step2: Place in ads Display sections

unicc