வுஷீ விளையாட்டில் இந்தியாவுக்கு நான்கு பதக்கங்கள்….!!!

வுஷீ விளையாட்டில் அரையிறுதிக்கு முன்னேறிய 4 இந்தியர்களுக்கு  வெண்கல பதக்கங்கள் கிடைத்தது. ஆசிய வுஷீ விளையாட்டில் இதுவே இந்தியாவின் அதிகப்பட்சமாகும். இந்த பெருமை நாவ்ரெம் ரோசிபிணி தேவி, சந்திஸ் குமார், சூர்யா பாஹு பிரதாப் சிங், நரேந்திர கிரிவல ஆகியோர் தேடி தந்துள்ளனர்.

மகளீர் பிரிவில் ரோஷிபினி 0-1 என சீனாவின் கேய் யிங்கியிங்கிடம் வீழ்ந்தார். ஆடவர் பிரிவில் சந்தோஷ் 0-2 என வியட்நாமின் டுருவோங் கியாங்கிடம் தோற்றார். பிரதாப் 0-2 என உஸ்பேகிஸ்தானின் எர்பான் அஹங்காரியனிடமும், நரேந்திர க்ரேவால் 0-2 என்ற கணக்கில் அதே நாட்டின் அக்மல் ராகிமோவிடமும் தோல்வி கண்டனர்.
நரேந்தர்க் கிரேவளுக்கு ஆசிய விளையாட்டு போட்டியில் இது 2-வது வெண்கல பதக்கமாகும். முன்னதாக அவர் 2014-ஆம் ஆண்டு சீசனில் ஊர் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இப்போட்டியில் பதக்கம் வென்றுள்ள இந்தியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment