விலங்குகள் வண்டலூர் பூங்காவில் ஆனந்தக் குளியல்!புகைப்படங்கள் உள்ளே

வண்டலூர் உயிரியல் பூங்காவில்,கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் அங்குள்ள மிருகங்களை பாதுகாக்க தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது.

Image result for Vandalur Zoo SUMMER SPECIAL

சென்னையை அடுத்த வண்டலூர் பூங்காவில் புலி, சிங்கம், கரடி, மான்கள், யானை உள்ளிட்ட விலங்கினங்களும், பல்வேறு பறவை இனங்களும் உள்ளன. தற்போது கோடை விடுமுறை என்பதால் மக்கள் கூட்டம் அலைமோதும் அதே வேளையில், வெயில் தாங்காமல் விலங்குகள் கூண்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றன. அவற்றுக்கு வெயிலினால் எந்த தீங்கும் நேராமல் இருப்பதற்காக தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது.

Image result for Vandalur Zoo SUMMER SPECIAL

விலங்குகளுக்காக அமைக்கப்பட்டுள்ள அகழியில் தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. அதில் புலிகள் ஆனந்தக் குளியல் போட்டு விளையாடுகின்றன.

விலங்குகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள கூண்டுகள் மீது தண்ணீர் ஊற்றப்படுகிறது. யானைகளுக்கென கட்டப்பட்டுள்ள பெரிய தொட்டியில் தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. அதில் துதிக்கையால் நீரை உறிஞ்சி குளியல் போடும் யானைகள் மற்றும் அதன் குட்டிகள் உற்சாகமாக தண்ணீரிலேயே பொழுதைக் கழிக்கின்றன.

Image result for Vandalur Zoo SUMMER SPECIAL

மலைப்பாம்பு, மனிதக்குரங்கு, சிறுத்தை ஆகியவற்றின் மீது கூண்டுக்கு வெளியே நின்ற படி ஊழியர்கள் தண்ணீரை ஊற்றுகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment