வடமாநிலங்களில் கடுமையான புழுதி புயல்..!

வடமாநிலங்களில் கடந்த மாதம் புழுதி புயல் ஏற்பட்டது. இதனால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. இதனால் டெல்லியின் காற்று மாசு மிக அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் தெரிவித்தனர்.

டெல்லியின் ஏற்கனவே காற்று மாசு அதிகமாக இருந்தது. தூசி மண்டலத்தால் சில சமயம் சாலையில் வாகனங்களை ஓட்டிச்செல்ல முடியாத நிலைமை இருந்தது. இந்நிலையில், காற்று மாசு உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளதாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

பொதுவாக காற்றின் தரம் 500 க்குள் இருந்தால் அதிகப்படியான மாசு உள்ளதாக கருதப்படும். ஆனால் இன்று டெல்லியில் காற்றின் தரம் அதையும் தாண்டி 778 ஆக உள்ளது. காற்றில் சொரசொரப்பான துகள்கள் அதிக அளவில் உள்ளது. இது சாலையில் பார்க்கும் திறனை குறைக்கும். இந்த மாசு இன்று மாலைக்குள் சிறிது குறைய வாய்ப்புள்ளதாக வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment