மே 17:இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விமான நிலையத்தில் திடீர் கைது..!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் திருமுருகன் காந்தி பதிவு செய்துவிட்டு திரும்பிய போது, பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தூத்துக்குடி படுகொலையை ஐ.நாவில் பேசியதற்காக பழைய போராட்ட வழக்குகளை காரணம் காட்டி திருமுருகன் காந்தி பெங்களூரில் கைது செய்யள்ளார். பாஜக அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அரசின் இந்த அடக்கு முறையினை வன்மையாக கண்டிப்போம்.” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஐ.நாவில் திருமுருகன் காந்தி பேசியது

  • விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என கோரி ஜெர்மனியில் உரையாற்றினார் திருமுருகன் காந்தி
  • ஐ.நாவில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் 8 வழிச்சாலை விவகாரங்கள் குறித்து பேசியதாகவும் தெரிகிறது.

அவர்  மீது தேச துரோக வழக்கு நிலுவையில் உள்ளதால், அவர் எந்த விமான நிலையம் வந்தாலும் கைது செய்யும் படி லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக திருமுருகன் காந்தியை கைது செய்த போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
 

author avatar
kavitha

Leave a Comment