மாணவர்களுக்கு தனிப்பேருந்து : தமிழக அரசும், போக்குவரத்துகழகமும் நாளை பதில் அளிக்க ஜட்ஜ் உத்தரவு

தமிழ்நாட்டில் பேருந்துகளின் சாதாரண நாட்களில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர் என அனைவரும் அரசு பேருந்துகளில் பயணிப்பதால் கூட்டம் அலைமோதும் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு வருவார்கள். இதனால் நிறைய விபத்துகளும் நடந்துள்ளன. நிறைய மாணவர்கள் இறந்துள்ளனர்.

இதனை தடுக்கும் பொருட்டு பள்ளி மாணவர்களுக்கு தனிப்பேருந்து அமைத்து தர  பொதுமக்களும், பிற பொது அமைப்புகளும் அவ்வபோது அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு தனிப்பேருந்து அமைக்கும் பொருட்டு வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் நீதி மன்றத்தில் முறையிட்டார். அவரது முறையீட்டை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் இது தொடர்பாக தமிழக அரசும், அரசு போக்குவரத்து கழகமும் நாளை பதிலளிக்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment