சிலிண்டர்கள் பதுக்கியவர்கள் இருவர் கைது..!

வணிக பயன்பாட்டிற்காக சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப் பட்டிருந்த வீட்டு உபயோக சிலிண்டர்களை போலிசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

புதுச்சேரியில் வீட்டு உபயோக சிலிண்டரை முறை கேடாக பதுக்கி வைக்கப்பட்டு வணிக பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுவதாக கவர்னர்க்கு புகார்  வந்ததையடுத்து உரிய நடவடிக்கை எடுக்க புதுச்சேரி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலிசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து போலிசார்  பல்வேறு பகுதி ஓட்டலில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் . அப்போது கன்னியக் கோவில்  பகுதியில் உள்ள தனியார்  ஒட்டல் பின்புறத்தில் வீட்டு உபயோக மற்றும் கமர்ஷியல் காஸ் சிலிண்டர்கள்  சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. கண்டுபிடிக்கப் பட்டது.

விசாரணையில் விட்டு உபயோக சிலிண்டர்களை அப்பகுதியில் உள்ள ஓட்டல்களுக்கும் , கார்களுக்கும் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் மற்றும் ஒட்டல் உரிமையாளர் வீட்டில் அவரது நண்பர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மொத்த 81 விட்டு உபயோக காஸ் சிலண்டர் களை பறிமுதல்  செய்து ராம், மற்றும் தன கோடி ஆகிய இருவரை கைது செய்து இதற்கு பயன்படுத்திய ஒரு டாடா ஏசி வாகனம், 5 மோட்டார் பைக்குகளை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல்  செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment