கூத்தாண்டவர் கோவில் திருவிழா..!!களப்பலியுடன் நிறைவு..!!

விழுப்புரம்  கூத்தாண்டவர் கோவிலில்  அரவான் களப்பலி கொடுக்கும் நிகழ்ச்சி நிறைவு பெற்றதை அடுத்து, திருநங்கைகள் கைம்பெண் கோலம் பூண்டு சொந்த ஊர் திரும்பினர். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. அங்கிருந்த திருநங்கைகள் கற்பூரம் ஏற்றியும், விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த விளை பொருட்களை வீசி எறிந்து அரவாணை வழிபட்டனர்.

பந்தலடிக்கு தேர் சென்றதும் அரவாண் களப்பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தங்களது கணவன் பலியிடப்பட்டதாகக் கூறி திருநங்கைகளை தாலியை அறுத்து, கதறி அழுதனர்.இதன்பின்னர் கோவிலில் உள்ள கிணற்றில் நீராடி விட்டு வெள்ளைப் புடவை அணிந்து கொண்டனர். கைம்பெண் கோலத்துடன் திருநங்கைகள் சொந்த ஊர் புறப்பட்டனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment