அதிர்ச்சி..! வாட்ஸ்ஆப்பை திறக்காமலேயே மெசேஜ் செய்யலாம்..!

 

மிகவும் பிரபலமான மெசேஜிங் தளமான வாட்ஸ்ஆப் நிறுவனம், அவ்வப்போது புத்தம் புதிய அம்சங்களை வாட்ஸ்ஆப்பில் இணைத்த வண்ணம் உள்ளது .

ஸ்மார்ட்போனின் சேமிப்பகத்தில் இருந்து டெலிட் செய்த பின்பும் கூட, இரண்டாம் முறை மீடியா பைல்களை டவுன்லோட் செய்யக்கூடிய திறன்

இரண்டிற்கும் மேற்ப்பட்ட அட்மின்களை கொண்டுள்ள வாட்ஸ்ஆப் க்ரூப்களுக்கான ‘டிஸ்மிஸ் ஏஸ் அட்மின்’, பின்னர் உருட்டப்பட்ட ‘சேவ்டு வாய்ஸ் மெசேஜஸ்’ என்கிற அம்சம்

கடந்த வெள்ளி அன்று வெளியான “ரெஸ்ட்ரிக்ட் க்ரூப்” (Restrict Group) அம்சம் ஆகியவைகளை கூறலாம்.

Image result for api.whatsapp.com ‘wa.me’ என்கிற ஒரு புதிய டொமைன் பெயரின் கீழ் பதிவு ஆகியுள்ளது. வாட்ஸ்ஆப்பீட்டாஇன்ஃபோ (WAbeta Info) வழியாக வெளியான அறிக்கையின்படி, api.whatsapp.com எனும் ஒரு குறுகிய டொமைன் வழியாக, மிக விரைவில் வாட்ஸ்ஆப் செயலியை திறக்க பயன்படுத்தப்படலாம்.

Related imageஇது எப்படி வேலை செய்யும்.? ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.18.138-ல் கிடைக்கும் இந்த அப்டேட்டின் பயன் என்னவென்று கேட்டால் : குறிப்பிட்ட நபருக்கு மெசேஜ் செய்ய விரும்பும் பயனர்கள், https://wa.me/ என்கிற டொமைனை டைப் செய்தும் அதனுடன் மொபைல் எண்ணை இணைக்கவும்.

Image result for https://wa.meஇதை நிகழ்த்த அவர்கள் தானாக குறிப்பிட்ட வாட்ஸ்ஆப் சாட்டிற்கு அனுப்பப்படுவார்கள். உதாரணமாக உங்கள் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களின் தொலைபேசி எண் +91-9876543210 எனில் https://wa.me/919876543210 என டைப் செய்ய வேண்டும்.

Image result for https://wa.me/919876543210வாட்ஸ்ஆப் செயலியை திறக்காமலேயே.! ஒருவேளை, குறிப்பிட்ட டொமைன் உடன் தவறான வாட்ஸ்ஆப் நம்பரை டைப் செய்து சாட்டை திறக்க முயற்சித்தால், இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப் ஆனது, யூஆர்எல் வழியாக பகிரப்பட்ட தொலைபேசி எண் தவறானது என உங்களுக்கு அறிவிக்கும். இதன் அர்த்தம், நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்ஆப் செயலியை திறக்காமலேயே, குறிப்பிட்ட நபர்களுக்கு வாட்ஸ்ஆப் செய்ய முடியும் என்று அர்த்தம். இந்த இடத்தில் உங்களுக்கு சரியான தொலைபேசி எண்கள் நினைவில் இருக்க வேண்டும் என்பதை மனதிற்கொள்ளவும்.

Image result for https://wa.me/919876543210ரெஸ்ட்ரிக்ட் க்ரூப் இது தவிர, வாட்ஸ்ஆப் சமீபத்தில் அதன் பீட்டா பயனர்களுக்கு ஸ்டிக்கர் ஆல்பத்தை வெளியிட்டது என்பதும், இந்த ஸ்டிக்கர் அம்சமானது, சில குறிப்பிட்ட காரணங்களுக்காக அனைத்து பயனர்களுக்கம் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் உருட்டப்பட்ட, “ரெஸ்ட்ரிக்ட் க்ரூப்” (Restrict Group) அம்சத்தினை பொறுத்தவரை, ஒரு வாட்ஸ்ஆப் க்ரூப்பின் அட்மினுக்கு, மெம்பர் ஒருவர் அனுப்பும் குறிப்பிட்ட டெக்ஸ்ட் மெசேஜை, புகைப்படங்களை, வீடியோக்களை,கிப் பைல்களை, டாக்குமெண்ட்ஸ்களை அல்லது வாய்ஸ் மெசேஜை கட்டுப்படுத்தும் சக்தியை வழங்குகிறது.

Image result for restrict group whatsappஎளிமையாக கூறவேண்டும் என்றால், ரெஸ்ட்ரிக்ட் க்ரூப் அம்சமானது க்ரூப்பின் மெம்பர்களை, முன் எப்போதும் இல்லாத அளவில் கட்டுப்படுத்தும் அதிகாரங்களை அட்மின்களுக்கு வழங்கும். வாட்ஸ்ஆப் 2.18.132 ஆண்ட்ராய்டு அப்ட்டேட்டில் அணுக கிடைக்கும்.!

Related imageபுதிய வாட்ஸ்ஆப் அம்சங்களை பொது தளத்திற்கு உருட்டும் முன்னர், அதை பரிசோதிக்கும் தளமான வாட்ஸ்ஆப்பீட்டா இன்ஃபோவின் (WABetaInfo) கூற்றுப்படி, இந்த புதிய அம்சம் ஆனது, வாட்ஸ்ஆப் 2.18.132 ஆண்ட்ராய்டு அப்ட்டேட்டில் அணுக கிடைக்கும். இந்த ரெஸ்ட்ரிக்ட் க்ரூப் அம்சமானது, கடந்த 2017 டிசம்பரில் மாதத்தில் பரிசோதனை தளத்தின் ப்ரைவஸி செட்டிங்ஸ்-ல் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஒரு க்ரூப்பின் அனைத்து மெம்பர்களுக்கு,க்ரூப் டிஸ்க்ரிப்ஷன், ஐகான் மற்றும் சப்ஜெக்டை திருத்தும் அனுமதி இருந்தது. ஆனால் இனி அதை அட்மினால் மட்டுமே நிகழ்த்த முடியும் (குறிப்பாக க்ரூப் டிஸ்க்ரிப்ஷன்) என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Image result for whatsapp 2.18.113வாட்ஸ்ஆப் பீட்டா இன்ஃபோவின் அறிக்கையின் படி, இப்போது வரையிலாக ​​இந்த புதிய அம்சமானது, ஆண்ட்ராய்டு பதிப்பிற்கான வாட்ஸ்ஆப் பதிப்பில் (2.18.113) கிடைக்கிறது மற்றும் மிக விரைவில் ஐஓஎஸ் தளத்திற்கு,ம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை நிகழ்த்த தனிப்பட்ட பொத்தான் எதுவும் இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Image result for whatsapp Saved Voice Messagesஸ்மார்ட்போனின் சேமிப்பகத்தில் இருந்தும் நீக்கப்பட்ட மீடியா உள்ளடக்கத்தை, குறிப்பிட்ட வாட்ஸ்ஆப் சாட் சென்று, மீண்டும் அந்த குறிப்பிட்ட மீடியா பைலை பதிவிறக்கம் செய்ய டாப் செய்யவும், அவ்வளவு தான். சேவ்டு வாய்ஸ் மெசேஜஸ் அம்சம் எப்படி வேலை செய்கிறது.? இதற்கு முன்னதாக வெளியான ‘சேவ்டு வாய்ஸ் மெசேஜஸ்’ என்கிற அம்சத்தை பொறுத்தவரை, முன்னதாக, ஒரு பயனர் வாய்ஸ் மெசேஜை ரெக்கார்ட் அம்சத்தை பயன்படுத்தும் போது அவர் குறிப்பிட்ட சாட்டை விட்டு வெளியேற முடியாது. ஆனால் இனி ஒரு வாய்ஸ் மெசேஜை பதிவு செய்யும், அதே நேரத்தில் அழைப்புகள் அல்லது பேட்டரி தீர போகிறது அல்லது வேற ஆப்பிற்குள் நுழைய வேண்டும் என்றால், தாராளமாக வாட்ஸ்ஆப் சாட்டை விட்டு வெளியேறலாம்.

நீங்கள் பதிவு செய்த வரையிலான வாய்ஸ் மெசேஜ் ஆனது வாட்ஸ்ஆப்பில் சேமிக்கப்பட்டு இருக்கும். எனவே நீங்கள் மீண்டும் மற்றொரு முறை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. இப்படியாகத்தான் சேவ்டு வாய்ஸ் மெசேஜஸ் அம்சம் வேலை செய்யும். பாதியில் விட்டுச்சென்ற வாய்ஸ் மெசேஜ் ஆனது சரியாக உள்ளதா என்பதை பரிசோதிக்க விரும்பினால், அதற்கும் ஒரு வழி இருக்கிறது. வெறுமனே ஹோம் ஸ்க்ரீன் செல்வதின் வழியாக வாய்ஸ் மெசேஜை கேட்க முடியும் என்று வெளியான வாட்ஸ்ஆப்பீட்டா இன்ஃபோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment