அதிமுக-விலிருந்து ஒபிஸ் தம்பி அதிரடி நீக்கம்….!!!

அதிமுக-விலிருந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தம்பி ஓ.ராஜா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
அதிமுக கட்சியிலிருந்து ஒபிஸ் தம்பி ஓ.ராஜா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் கொள்கை கட்டுப்பாடுக்கு எதிராக செயல்பட்டதாக துணை முதல்வர்  ஓபிஸ் தம்பி ஓ.ராஜா அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
அதிமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பில் , அதிமுகவின் கொள்கை – குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாடை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தேனி மாவட்டத்தை சேர்ந்த ஓ.ராஜா  இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளின் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment