வெளியானது இளைஞர்களின் கனவு வாகனமான நிஞ்ஜா 1000 SX! விலை தெரிந்தால் நீங்கள் என்ன ஆவீங்களோ!!

ஸ்போர்ட்ஸ் பைக் என்றாலே பலருக்கும் முதல் முதலில் நியாபகம் வருவது கவாஸாகி நிஞ்ஜா தான். உலக சந்தைகளில் பல பைக் வெளிவந்தாலும், நிஞ்ஜாக்கு ஒரு தனி மதிப்பு உண்டு. தற்பொழுது கவாஸாகி நிறுவனம், இந்தியாவில் தனது நான்காம் தலைமுறை பைக்கான 1000 சிசி மிருகத்தினை பி.எஸ்.6 மாடலில் அறிமுகப்படுத்தியுள்ளது. அது, நிஞ்ஜா 1000 எஸ்எக்ஸ்.

பல இளைஞர்களின் கனவு பைக்கான இது, ஹோண்டா நிறுவனத்தில் சிபிஆர் 1000 RR மற்றும் பிஎம்டபிள்யூ S 1000 RR பைக்குகளுக்கு போட்டியாக வந்தது. மேலும் கவாஸாகி நிறுவனம், இந்தியாவிலே தயாரித்து, சந்தைப்படுத்திய முதல் மாடலாகும். 

இந்த பி.எஸ்.6 அப்டேட்டில் கூர்மையான டிசைன், கூடுதலான வசதிகள் உள்பட சில மாற்றங்களை செய்துள்ளது. அதுமட்டுமின்றி, எக்ஸாஸ்ட் சிஸ்டம் ட்வின்-எக்ஸாஸ்ட்டில் இருந்து சிங்கிள் எக்ஸாஸ்ட் ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் பைக்கின் சத்தம் சிறிது குறையும். மேலும் இதில் பக்கவாட்டு பேனல்கள் மற்றும் சற்று திருத்தியமைக்கப்பட்ட பெல்லி பான் உள்ளிட்ட மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. அதனைத்தவிர்த்து, பைக்கின் காற்று இயக்கவியலிலும் (Aerodynamics) கவாஸாகி நிறுவனம் சிறிது மாற்றங்களை செய்துள்ளது.

என்ஜினை பொறுத்தளவில், இந்த கவாஸாகி எஸ்.எக்ஸ் 1000 பி.எஸ்.6, 1043 சிசி லீகுய்ட் குல்டு இன்லைன் 4-சிலிண்டர் என்ஜினை கொண்டுள்ளது. அது அதிகப்பட்சமாக 10000 ஆர்பிஎம்-ல் 140 Bhp பவரையும், 8000 ஆர்பிஎம்-ல் 111 Nm டார்க்கை வெளிப்படுத்தும். அந்த என்ஜினை இயக்குவதற்கு 6 ஸ்பீட் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த பைக்கில் எலக்ட்ரானிக் மூலம் பல அம்சங்கள் உள்ளது. எலக்ட்ரானிக் த்ரோட்டல் வால்வுகள், எலக்ட்ரானிக் க்ரூஸ் கண்ட்ரோல், குயிக் ஷிஃப்டர், கார்னரிங் மேனேஜ்மெண்ட் கண்ட்ரோல், தரமான ஆண்டி-லாக் ப்ரேக்கிங் சிஸ்டம் (ABS), ரைடிங் மோட்கள் மற்றும் 3-நிலை ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்டவை அடங்குகின்றன.

Kawasaki Ninja 1000SX 2020 Motorcycle Review – New Z1000SX For Sale

இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டரை பொறுத்தளவில், ஸ்மார்ட்போன் மூலம் இணைக்கக்கூடிய 4.3 இன்ச் டிஎப்டி (TFT) டிஸ்பிலேயை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஹீட்லம்ப்களை பொறுத்தளவில், எல்இடி பல்புகளை கொண்டுள்ளது. பின்புற மற்றும் இண்டிகேட்டர் விளக்குகளும் எல்இடிஆல் ஆனது குறிப்பிடத்தக்கது.

இந்த பைக்கில் பில்லியன் (பின்னால் அமர்பவருக்கு) சீட் ரொம்ப சின்னதாக இருப்பதாக குற்றசாட்டு எழுந்தது. தற்பொழுது அத்தனையும் கவாஸாகி நிறுவனம் சரிசெய்து கூடுதல் நீளமாக வழங்கப்பட்டுள்ளது.

2020 Kawasaki Ninja 1000SX first look: Sport-touring lives on ...

இந்த பைக்-ல் மெட்டாலிக் க்ராஃபைட் க்ரே/மெட்டாலிக் டியாப்லோ ப்ளாக் மற்றும் மரகதத்தால் மெருகூட்டப்பட்ட பச்சை/மெட்டாலிக் கார்பன் க்ரே/மெட்டாலிக் க்ராஃபைட் க்ரே ஆகிய நிறங்கள் இந்திய சந்தைகளில் வெளியாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பைக்கின் விலை, ரூ.10.79 லட்சம் (எக்ஸ் ஷோரூம், டெல்லி) என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.