,

Yes Bank நிறுவனர் அதிரடியாக கைது.!

By

வாராக்கடன் பிரச்சினையிலும், பண மோசடிலும் சிக்கிய யெஸ் வங்கியை, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து வாராக்கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட யெஸ் வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ராணா கபூரின் டெல்லி, மும்பை இல்லங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் பல மணி நேர விசாரணைக்குப் பிறகு இன்று அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். பின்னர் பல கோடி ரூபாய் கடன் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக விசாரணையை மேற்கொண்டு வரும் அமலாக்கத்துறையினர் முக்கிய ஆதாரங்களை கைப்பற்றியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, 2,450 கோடி ரூபாய் மூலதனத்தில், யெஸ் வங்கியின் 49 சதவீத பங்குகளை தலா 2 ரூபாய் வீதம் வாங்க உள்ளது. இந்த பணிகளை வரும் ஏப்ரல் மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 50 ஆயிரம் ரூபாய் வரை இம்மாதத்தில் வாடிக்கையாளர்கள் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. யெஸ் வங்கி மட்டுமின்றி இதர ஏடிஎம்களிலும் பணத்தை எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinasuvadu Media @2023