யாஷ் புயல் : 4 நாட்களுக்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை..!!

மத்திய கிழக்கு வங்க கடலில் யாஷ் புயல் நாளை உருவாவதையடுத்து நான்கு நாட்களுக்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை

மத்திய கிழக்கு வங்க கடலில் யாஷ் புயல் நாளை உருவாவதையடுத்து,இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் இந்த மூன்று நாட்கள் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வரை வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.அதற்கு அடுத்ததாக வருகின்ற  26ஆம் தேதி மன்னார் வளைகுடா தெற்கு வங்க கடல் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்றும், நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் கனமழைக்கு வாய்ப்பு எனவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 தமிழகத்தில் அதன் பிறகு மழை படிப்படியாக குறையும் . கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில், கிருஷ்ணகிரி நெடுங்கல்லில் 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.