29 C
Chennai
Wednesday, June 7, 2023

உருவானது ‘பிபோர்ஜோய்’ புயல்.! 6 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுபெறுகிறது…

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில்...

இன்று முதல் ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு கட்டண தள்ளுபடி – மெட்ரோ நிர்வாகம்!

இன்று முதல் ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு கட்டண...

ஆஹா…வசூலில் செம மாஸ் காட்டும் ‘பிச்சைக்காரன் 2’…இதுவரை எத்தனை கோடிகள் தெரியுமா.?

பிச்சைக்காரன் 2 திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை விஜய் ஆண்டனி இயக்கி தானே ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் காவ்யா தாபர், ரித்திகா சிங், மன்சூர் அலி கான், ராதா ரவி, ஜான் விஜய், தேவ் கில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.

Pichaikkaran2
Pichaikkaran2[Image source : twitter/@CinemaWithAB]

இப்படம் 2014ஆம் ஆண்டு வெளிவந்த ‘பிச்சைக்காரன்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாகும்.  இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் கடந்த மே 19-ஆம் தேதி உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியானது.

Pichaikkaran2 movie
Pichaikkaran2 movie [Image source : twitter/@Nn84Naganatha]

படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாக கருத்துக்களை கூறி வருகிறார்கள். இந்த நிலையில், படம் வெளியான நாளிலிருந்து தற்போது வரை எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல்கள் கசிந்துள்ளது.

Pichaikkaran2 bb
Pichaikkaran2 bb [Image source : twitter/@V2Cinemas]

அதன்படி, இந்த திரைப்படம் வெளியான நாளிலிருந்து தற்போது வரை உலகம் முழுவதும் 32 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கு நல்ல வரவேற்பது கிடைத்து வருவதால் வரும் நாட்களில் இன்னும் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.