உலகிலேயே உயரமான அம்பேத்கர் சிலை இன்று திறப்பு!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி என்று அழைக்கப்படும் Dr. BR அம்பேத்கரின் உலகின் மிக உயரமான சிலையை ஆந்திர மாநில அரசு இன்று விஜயவாடாவில் திறக்கவுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அமைந்துள்ள இந்த சிலையை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திறந்து வைக்கிறார்.

சிலை அமைக்கப்பட்ட இடத்திற்கு ‘ஸ்மிருதி வனம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 125 அடி உயரம் கொண்ட இந்த சிலை, 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதால், இதன் மொத்த உயரம் 206 அடியாக உள்ளது. ரூ. 404.35 கோடி செலவில் உருவான இந்த சிலை 18.81 ஏக்கர் நிலப்பரப்பில் பசுமையான பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது.

அம்பேத்கரின் வாழ்க்கையை காட்சிப்படுத்த எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2,000 இருக்கைகள் கொண்ட மாநாட்டு மையம், 8,000 சதுர அடியில் உணவு மைதானம் மற்றும் குழந்தைகள் விளையாடும் இடம் ஆகியவையும் அந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் துயரம்! படகு கவிழ்ந்து 16 பேர் பலி!

தரையில் இருந்து 175 அடி உயரமுள்ள இரண்டாவது அம்பேத்கர் சிலை அண்டை மாநிலமான தெலுங்கானாவில் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு, மிக உயரமான அம்பேத்கர் சிலை அமெரிக்காவின் மேரிலாந்தில் திறக்கப்பட்டது குறிபிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.