மகளிரணி தலைவியின் காலை வாரிய மாட்டு வண்டி..!-பதற்றத்தில் தலைவி..!

பெட்ரோல் விலையுயர்வை கண்டித்து நடந்த போராட்டத்தில் மகளிரணி தலைவி மாட்டு வண்டியில் ஏறமுற்பட்டபோது மாடுகள் வண்டியை பின்பக்கம் தள்ளியதால் தலைவி கீழே விழும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் மகளிரணி தலைவி அமுதாவுடன் திரளாக சேர்ந்த மகளிர் கூட்டம் சாலையில் வைத்திருந்த சிலிண்டருக்கு மாலை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் மகளிரணி தலைவியை மாட்டுவண்டியின் மீது ஏறி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அதனால் அங்கு ஒரு மாட்டு வண்டி கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், இதில் ஏறுவதற்காக பிளாஸ்டிக் நாற்காலியை பயன்படுத்தியுள்ளார் மகளிரணி தலைவி. இந்நிலையில், மாட்டு வண்டியில் இருக்கும் மாடுகள் இரண்டும் திடீரென்று பின்பக்கம் நகர்ந்ததால், பின்பக்கம் ஏறுவதற்காக நாற்காலியில் நின்றுகொண்டிருந்த தலைவி அமுதா கீழே விழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

தலைவியின் உடனிருந்தவர்கள் கீழே விழாமல் தடுத்து தாங்கி பிடித்துள்ளனர். இதன் பிறகு தலைவி ஒருவித பதற்ற நிலையை அடைந்துள்ளார். அதனால் மீண்டும் மாட்டு வண்டியில் ஏறுவதை தவிர்த்துள்ளார். பின்னர் மாட்டு வண்டி வண்டிக்காரரால் அழைத்து செல்லப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்த சென்ற இடத்தில் நடந்த இச்சம்பவத்தால் இது மக்களிடையே பரவி வருகிறது.