திரைத்துறையினருக்கு நம்பிக்கை கொடுக்குமா டாக்டர்..? அடுத்த வாரம் வெளியாகும் டிரைலர்..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் டிரைலர் அடுத்த திங்கள் கிழமை வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இந்த படத்தில் சிவகார்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் யோகி பாபு ,வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திலிருந்து வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் சிறப்பான வெற்றியை பெற்றுவருகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான டிரைலர் அடுத்த வாரம் திங்கள் கிழமை வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். வருகின்ற மார்ச் மாதம் 26 ஆம் தேதி திரையங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தை தொடர்ந்து வெளியான அணைத்து படங்களும் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்து வரும் நிலையில், ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையரங்கு உரிமையாளர்களும் இந்த டாக்டர் திரைப்படத்திற்காக காத்துள்ளார்கள். மேலும் டாக்டர் படம் திரைத்துறை யினருக்கு நம்பிக்கை கொடுக்குமா  என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.