ஏப்ரல் மாதத்தில், ஒவ்வொரு நாளும் வேப்பிலை சாப்பிட வேண்டியது ஏன் என்று அறிவீரா?

அக்காலத்தில் கோடை காலம் என்பது ஏப்ரல் மாத கடைசியில் தோன்றி, மே மாதம் முழுக்க நீடிக்கும்; ஆனால், இப்பொழுதோ ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலேயே கோடை காலம் தோன்றிவிடுகிறது. ஆகையால் காலநிலை மாற்றங்களால் உடலில் பற்பல நோய்த்தொற்றுகளும் உண்டாகின்றன; கோடைகாலத்தில் உடலில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க உரிய முன்னெச்சரிகளை நாம் வேண்டும்.

அப்படிப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பற்றியே இந்த பதிப்பில் நாம் படிக்கவிருக்கிறோம். ஏப்ரல் மாதத்தில், ஒவ்வொரு நாளும் வேப்பிலை சாப்பிட வேண்டியது ஏன் என்பது பற்றி இப்பதிப்பில் படித்து அறியலாம்.

வேப்பிலை

வேப்பிலையில் ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன; வேம்பிலை மிக மிக குறைந்த அளவு கொழுப்பினையும், புரதம், கார்போஹைட்ரேட், இரும்பு, கலோரிகள், நார்ச்சத்து போன்ற சத்துக்களை அதிகமாகவும் கொண்டுள்ளது.

இப்பொழுது வேப்பிலையை ஏப்ரல் மாதத்தில், ஒவ்வொரு நாளும் சாப்பிடுவதால் உண்டாகும் பலன்கள் பற்றி பார்க்கலாம்.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோயாளிகள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல், இனிப்புகள், இனிப்பான பானங்களை அருந்த முயல்வர்; அச்சமயங்களில் சர்க்கரை அளவு அதிகரித்து விடும் வாய்ப்புண்டு. ஆனால் தினசரி வேப்பிலையை உண்டு வந்தால், உடலில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வைக்கப்படும்.

பல் ஆரோக்கியம்

வேப்பிலை சேர்த்த பற்பசை கொண்டு அல்லது வேப்பங்குச்சி கொண்டு பல் துலக்கி வந்தால், பற்களில் ஏற்படும் சிதைவுகளை தடுத்து, பல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.

தலைமுடி பிரச்சனைகள்

கோடை வியர்வையால் தலையில் ஏற்படும், பிசுபிசுப்பு, பேன், பொடுகு போன்றவற்றை குணப்படுத்த வேப்பிலை ஒரு சிறந்த தீர்வாகும்.

பருக்கள்

கோடையில் ஏற்படும் பரு போன்ற சரும பிரச்சனைகளை போக்க, தினசரி வேப்பிலையை உண்டு வருவது உதவும். மேலும் வேப்பிலையை சரும பிரச்சனை உள்ள இடங்களில் தடவுதல் உடனடி நிவாரணம் அளிக்கும்.

புற்றுநோய் மற்றும் மலேரியா

புற்றுநோய் மற்றும் மலேரியா போன்ற உயிர்க்கொல்லி நோய்கள், பாதிப்பை ஏற்படுத்தாமல் காக்க வேப்பிலை பேருதவி புரியும்.

மேலும் தினசரி வேப்பிலை உண்டு வருவது, உடலில் குடல் நோய்கள் ஏற்படாமல் தடுக்க பெரிதும் உதவும்.

author avatar
Soundarya

Leave a Comment