ஹோட்டல்கள் மற்றும் மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கும் அரசு தட்டச்சு பயிற்சி மையத்தை திறக்க அனுமதிக்காதது ஏன்?

டாஸ்மாக் கடைகள் மற்றும் ஹோட்டல்களை திறக்க அனுமதித்திருக்கும் பொழுது, தட்டச்சு மற்றும் கணினி பயிற்சி மையங்களை திறக்க தமிழக அரசு அனுமதித்தது ஏன்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

கொரானா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள், தட்டச்சுப் பயிற்சி மையங்கள், கணினி மையங்கள், ஹோட்டல்கள், ரயில்கள், விமானப் போக்குவரத்து என அனைத்துமே மூடப்பட்ட  நிலையில் இருந்தது. ஆனால் அண்மையில் அரசு மக்களுக்காக சில தளர்வுகளை கட்டுப்பாட்டுடன் அறிவித்து வருகிறது. அதில் ரயில்கள், விமான சேவைகள், ஹோட்டல்கள் மதுபான கடைகள் கூட திறக்க அனுமதி கொடுத்து இருக்கும்பொழுது தட்டச்சுப் பயிற்சி மையங்கள் திறக்க அனுமதிக்கவில்லை.

எனவே அண்மையில் மதுரையை சேர்ந்த செந்தில் என்பவர் தட்டச்சுப் பயிற்சி மையங்களை திறக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தட்டச்சு மற்றும் கணினி பயிற்சி மையங்கள் மூடப்பட்டுள்ளதால் 10 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் தட்டச்சுப் பயிற்சி மையங்களை திறக்க கோரியும் தமிழக அரசிடமிருந்து உத்தரவு வரவில்லை. எனவே தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளையில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவை காணொளி காட்சி மூலம் விசாரித்த நீதிபதிகள், தட்டச்சுப் பயிற்சி மையங்களை திறக்க அனுமதிக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக தலைமை செயலாளர், பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

Rebekal

Recent Posts

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

34 mins ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

2 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

2 hours ago

அடேங்கப்பா.! ரத்த அழுத்தத்தை கூட குறைக்குமாம் தர்பூசணி விதைகள்.!

Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள்  நம்மில் பலரும்…

2 hours ago

ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு கவினுக்கு கால் செய்த சிம்பு! என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார். நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார்…

2 hours ago

டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! போலீசார் தீவிர சோதனை…

Bomb Threat : டெல்லி, நொய்டாவில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது. டெல்லி மற்றும் உ.பி நொய்டாவில் இதுவரை 60க்கும் மேற்பட்ட…

2 hours ago