தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பை மோடி பார்வையிடாதது ஏன்? – ஆ.ராசா

கடந்த 31ம் தேதி முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி, நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு சபைகளிலும் பட்ஜெட் மீதான விவாதம் காரசாரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மக்களவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தின் போது தமிழக வெள்ள நிவாரணத் தொகை விடுவிப்பது தொடர்பாக எம்பி ஆ.சாரா சரமாரியாக கேள்வி எழுப்பி பேசினார்.

இதனால் மக்களவையில் பாஜக – திமுக இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. மக்களவையில் ஆ.ராசா பேசியதாவது, தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிவாரண நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் பார்க்கிறது. நிதி வழங்குவது தொடர்பாக இதுவரை மத்திய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை. மாநில பேரிடர் நிதிக்கும், தேசிய பேரிடர் நிதிக்கும் வித்தியாசம் உள்ளது. இதனால் பிற மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிதியை ஒதுக்கியதை போல் தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்திப்பு!

நிவாரண நிதி வழங்குவதில் அனைத்து மாநிலங்களையும் சமமாக நடத்த வேண்டும். குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களுக்கு வழங்குவதுபோல் அனைத்து மாநிலங்களுக்கும் வழங்க வேண்டும். வெள்ள சேதங்கள் தொடர்பான  மத்திய அரசின் ஆய்வுக் குழு அறிக்கையும், தமிழக அரசின் அறிக்கையும் மத்திய அரசிடம் உள்ளது. இரண்டு அறிக்கைகள் கையில் உள்ளபோதும் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் வழங்க மறுக்கிறது.

தமிழ்நாட்டை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. தமிழ்நாட்டில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டபோது பிரதமர் மோடி நிலைமையை உன்னிப்பாக கவனிப்பதாக கூறப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பை பிரதமர் மோடி பார்வையிடாதது ஏன் என் கேள்வி எழுப்பினார். இதுபோன்று, பாஜக அரசை குற்றச்சாட்டி டிஆர் பாலுவும் மக்களவையில் பேசினார். அப்போது பாஜக – திமுக எம்பிக்கள் முழக்கமிட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனால், இரு கட்சிகளிடையே கடுமையான காரசார வாதம் ஏற்பட்டது.

Leave a Comment