அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் நடிப்பது யார் யார் தெரியுமா.!

‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தில் பிருத்விராஜ் கதாபாத்திரத்தில் ஆர்யாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

சச்சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும் ‘. அய்யப்பன் என்ற போலீஸ் அதிகாரியாக பிஜூ மேனனும், கோஷியாக பிருத்விராஜூம் நடித்திருந்தார்கள். மேலும் கவுரி நந்தா, அன்னா ராஜன், ரஞ்சித் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டானது. 

இந்த நிலையில், இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்வதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை வெற்றி படமான ஜிகர்தண்டா படத்தை தயாரித்த ஃபை ஸ்டார் கதிரேசன் அவர்கள் தயாரிக்க இருக்கிறார். முன்னதாக இந்த படத்தில் சசிகுமார் மற்றும் சரத்குமார் நடிக்கவுள்ளதாக சில தகவல்கள் கசிந்தது. அதனையடுத்து இந்த ரீமேக் படத்தில் நடிகர் பிஜூ  நடித்த கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிக்க விரும்புவதாக கூறியிருந்தார் . இந்த நிலையில் தற்போது பிருத்விராஜ் கதாபாத்திரத்தில் ஆர்யாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.