தனுஷ் வீட்டிற்குள் புதியதாக இணைந்த அந்த இருவர் யார்.?

தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதியதாக ஒரு போஸ்ட் ஒன்றை பதிவு செய்துள்ளார். 

நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன், என்ற படத்திலும், இயக்குனர் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் எனும் படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், நேற்று நடிகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதியதாக ஒரு போஸ்ட் ஒன்றை பதிவு செய்திருந்தார். அதில், தான் வளர்க்கும் HUSKY இனத்தை சேர்ந்த  2 நாய்களை மடியில் வைத்து புகைப்படத்தை வெளியிட்டு அதில் “எனது குடும்பத்திற்கு வரவேற்கிறேன் கிங் மற்றும் காங். உங்களுடனான சாகச பயணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் நடிகர் தனுஷ் மிகவும் இளமையாக அழகாக இருப்பதாக ரசிகர்கள் குறிப்பிட்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Dhanush (@dhanushkraja)

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.