‘விசில் போடு’ அரசியல் பாடலா? பாடலாசிரியர் மதன் கார்க்கி விளக்கம்.!

Whistle Podu: நடிகர் விஜய் நடித்துள்ள ‘கோட்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘விசில் போடு’ பாடல் குறித்து மதன் கார்க்கி விளக்கம் அளித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT)திரைப்படம் இந்த ஆண்டு வெளிவரவிருக்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

அதற்கு முன்னதாக, ரசிகர்களுக்கு அப்டேட் கொடுக்கும் வகையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, GOAT படக்குழு படத்திலிருந்து “விசில் போடு” என்ற முதல் பாடலை வெளியிட்டனர். பாடல் வெளியானதும், சிலருக்கு லிரிக்ஸ் புரியவில்லை என்றும், இது அரசியல் பாடல் போல் இருப்பதாகவும் கருத்துக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ‘விசில் போடு’ பாடலை சிலர் தவறாகப் புரிந்து கொள்வதாக பாடலாசிரியர் மதன் கார்க்கி கூறியுள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், சிலர் இந்தப் பாடலை அரசியல் உடன் தொடர்புபடுத்திக் கொள்கின்றனர். ஆனால், இது ஒரு வீடியோ கேம் பார்ட்டி அவ்வளவு தான்.

புது மிஷன் ஒன்றிற்கு அனைவரையும் வரவேற்கும் விதமாக இந்த பாடல் அமைந்தது. முதலில் ‘சல்யூட்’ என்று தான் எழுதினேன். ஆனால், அது சரியாக பொருந்தவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.