,
Disha Patani tattoo

பிரபாஸுடன் திஷா பதானி டேட்டிங்? டாட்டூவின் ரகசியம் என்ன?

By

திஷா பதானி : பாலிவுட் நடிகரான டைகர் ஷெராப் உடன் காதல் உறவில் இருந்து பிரிந்ததில், திஷா பதானியின் டேட்டிங் பற்றிய ஊகங்கள் சமூக வலைத்தளங்களில் பரவ தொடங்க ஆரம்பித்து விட்டது.

தற்போது, வெல்கம் பேக் தவிர,நடிகர் சூர்யாவின் கங்குவா படத்திலும் நடித்து வரும் திஷா பதான, இப்போது பான் இந்தியா ஸ்டார் பிரபாஸுடன் டேட்டிங் செய்து வருவதாக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கு வலுசேர்க்கும் விதமாக, திஷா பதானி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படத்தினை ரசிகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

அந்த படத்தில், அவரது இடது  கையில் ‘P.D’ என பச்சை குத்தியிருப்பது தெரிகிறது. இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது, இதனை ‘p’ பிரபாஸ் மற்றும் ‘D’ திஷா’ என்பதன் சுருக்கமென பலரும் அனுமானத்தின் அடிப்படையில் கூறிவருகின்றனர்.

டாட்டூ ரகசியம் என்ன 

இந்த வதந்திகல் பரவ தொடங்கிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, திஷா இறுதியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த புகைப்படத்தை பகிர்ந்து கொண்டு “என் டாட்டூவைச் சுற்றி மிகவும் ஆர்வமாக இருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன். மகிழ்ச்சி எதைப் பற்றியது என்பதைக் கண்டறியவும் என்று குறிப்பிட்டு இருந்தார். திஷாவின் ரகசிய அறிக்கை அவரது டாட்டூ மற்றும் அதன் அர்த்தம் என்னவாக இருக்கும் என பல ஊகங்களை மேலும் தூண்ட செய்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by disha patani (paatni) 🦋 (@dishapatani)

Dinasuvadu Media @2023