பாஜகவிடம் இருந்து பிரிந்து செல்ல காத்திருக்கிறோம் -அதிமுக அமைச்சர் பரபரப்பு பேச்சு

  • அதிமுக -பாஜக இடையே கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
  • பாஜகவிடம் இருந்து பிரிந்து செல்ல காத்திருக்கிறோம் என்று அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி அமைக்கப்பட்டது. ஆனால் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக 5 தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.அதிமுகவும் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது.இதன் பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக மட்டுமே போட்டியிட்டது.கூட்டணி கட்சிகள் போட்டியிடவில்லை.இதனையடுத்து  தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட  மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும்  கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற்றது.அதன்படி முதல் கட்டமாக கடந்த 27-ஆம் தேதியும் இரண்டாம் கட்டமாக கடந்த 30-ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்றது.இதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக கனிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.ஆனால் ஆளுங்கட்சியான அதிமுக ஒரு சில இடங்களில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டுள்ளது.ஆனால் எதிர்க்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணி அதிமுக கடும் நெருக்கடி கொடுத்தது.

ஆனால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்த பின்னர் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் சற்று சலசலப்பு அதிகமாகி வருகிறது.இதன் ஒரு பகுதியாக முன்னாள் மத்திய அமைச்சரும்,பாஜகவின் மூத்தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், பாஜகவின் காலம் தமிழகத்தில் தொடங்கி விட்டது.உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், தமிழகத்தில் பாஜகவிற்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளதை காட்டுகிறது. கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லை என்றாலும் நாங்கள் பல இடங்களில் வெற்றி பெற்றிருப்போம்.உள்ளாட்சி தேர்தலில் பாஜக  தனித்து போட்டியிட்டு இருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்தார். ஆனால் இவரின் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார்.மேலும் பாஜக மாநிலத் தலைவர் பதவி கிடைக்காத விரக்தியில் முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகிறார் என்று விமர்சனம் செய்தார்.  

இந்நிலையில் அதிமுக அமைச்சர் பாஸ்கரன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் விழா நடைபெற்றது.இந்த விழாவில் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் பேசுகையில், பாஜகவிடம் இருந்து பிரிந்து செல்ல நேரம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். எங்களின் அமைச்சரவையிலே  குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள் என்று தெரிவித்தார். அமைச்சரின் இந்த கருத்து அதிமுக -பாஜக கூட்டணி இடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

Recent Posts

ஊழல்வாதி என நிரூபித்தால் என்னை தூக்கிலிடுங்கள்..! பிரதமர் மோடி ஆவேசம்.!

சென்னை : என்னை ஊழல்வாதி என நிரூபித்தால் தூகிலுடுங்கள் என்று ஆவேசமாக பிரதமர் மோடி அவர்கள் பேசி இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நாடெங்கும்…

38 mins ago

டெல்லி மதுபான கொள்கை வழக்கு.! குற்றப்பத்திரிகையில் முதன் முதலாக அரவிந்த் கெஜ்ரிவால் பெயர்.!

சென்னை: டெல்லி மதுபான கொள்கை வழக்கிற்கான குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லியில் ஆளும் ஆம்…

44 mins ago

பைக் பஞ்சர் ஆச்சுன்னா அஜித் என்ன செய்வாரு தெரியுமா? என்னங்க இந்த விஷயத்தை நம்பவே முடியல!!

சென்னை : பைக் பஞ்சர் ஆனால், அஜித் பைக்கை அந்த இடத்திலே நிறுத்திவிட்டு சென்றுவிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் பொதுவாகவே பைக் மீது அதிகம்…

53 mins ago

மின்சரம் தாக்கி செயலிழந்த சிறுவனின் இதயம்.. நொடி பொழுதில் உயிரை மீட்ட மருத்துவர்.! வைரல் வீடியோ..

சென்னை: மின்சாரம் தாக்கி சுயநினைவை இழந்த சிறுவனைCநொடி பொழுதில் காப்பாற்றிய பெண் மருத்துவர் வீடியோ வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலத்திலுள்ள விஜயவாடா நகரத்தில் அய்யப்பா நகரில் மின்சாரம்…

1 hour ago

மழை நேரத்தில் ஏசி போடலாமா? நிபுணர்கள் கூறுவது என்ன ?

சென்னை : மழை பெய்யும் நேரத்தில் ஏசியை உபயோகப்படுத்தலாமா கூடாதா ? மழை பெய்யும் பொழுது பயன்படுத்தினால் என்ன ஆகும் என்பதை பற்றி இந்த தகவலில் நாம்…

1 hour ago

சவுக்கு சங்கருக்கு மே 28வரையில் நீதிமன்ற காவல்.! திருச்சி நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை: சவுக்கு சங்கருக்கு மே 28வரையில் நீதிமன்ற காவல் விதித்தது திருச்சி குற்றவியல் நீதிமன்றம். பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர் மற்றும்…

1 hour ago