3ஜியிலிருந்து 4ஜிக்கு மாறும் வோடோபோன் ஐடியா

இந்தியாவின் வோடோபோன் மற்றும்  ஐடியா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவையை 3ஜியிலிருந்து 4ஜிக்கு மாற்ற முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ வருகையால் கடும் போட்டியை சந்தித்த வோடோபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் கடந்த 2018 ல் இருதுருவங்களும் இணைந்தன. எனினும் கடந்த மாதம் இரண்டு நிறுவனங்களும் ‛Vi’ என்ற ஒரே பிராண்டை அறிவித்தன. இதையடுத்து போட்டி நிறுவனங்களை சமாளிக்கும் விதமாக வாடிக்கையாளர்களுக்கு அதிவேக டேட்டா சேவையை வழங்க முடிவு செய்துள்ளது. இதனால் 3ஜி சேவையிலிருந்து 4ஜி சேவைக்கு மாற்ற அந்நிறுவனம் முடிவு எடுத்துள்ளது. இதை பல்வேறு கட்டங்களாக நிறைவேற்ற நிறுவனம் முடிவு செய்துள்ளது. எனவே, இதனால் 900 MHz, 1800 MHz, 2100 MHz அலைக்கற்றைகளை 4ஜி சேவைக்கு மாற்ற முடிவு எடுககப்பட்டுள்ளது. அதே நேரம் 2ஜி சேவை மூலம் வாடிக்கையாளர்களுக்கு குரல் அழைப்பு சேவை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சேவை 100 கோடி இந்தியர்களுக்கு வழங்கப்படும் என நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரவீந்தர் தாக்கர் தெரிவித்துள்ளார்.

author avatar
Kaliraj