ரசிகரிடம் தாறுமாறாக பதிலடி கொடுத்த VJ மணிமேகலை.!

அவரது இந்த பதிலடி பலரையும் கவர்ந்தது மட்டுமில்லாமல் வைரலாகியும் வருகிறது. தனியார்

By ragi | Published: May 28, 2020 03:57 PM

அவரது இந்த பதிலடி பலரையும் கவர்ந்தது மட்டுமில்லாமல் வைரலாகியும் வருகிறது.

தனியார் தொலைக்காட்சியான சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் மணிமேகலை. தற்போது தன்னுடைய குறும்பு பேச்சால் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  இவர் 2017 ல் ஹுசைன் என்ற நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

இந்த நிலையில் சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து தனது கணவருடன் முஸ்லிம் தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு முன்பெல்லாம் என் நண்பர்களிடம் நான் தான் பிரியாணி கேட்பேன், இப்போது எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள் ஒரே நகைச்சுவையா இருக்கு போ என்று பதிவிட்டிருந்தார் . அதனை பார்த்த ரசிகர் ஒருவர் "உங்களை காதலித்து திருமணம் செய்து முஸ்லிம் மதத்திற்கு மாற்றி விட்டார், இது தான் லவ்வோ என்று கமென்ட் செய்ய, அதற்கு பதிலடியாக ரம்ஜான் வாழ்த்து செல்வதற்கு மதம் மாறிவிட்டு தான் செல்லும்? யாரும் இங்கு மதம் மாறவில்லை, ஹுசைன் என்னுடன் கோவிலுக்கு வருவார், நாங்கள் ரம்ஜான் கொண்டாடுவோம், நாங்கள் இதில் தெளிவாக உள்ளோம், உங்கள் குழப்பங்களை இங்கு கொண்டு வராதீர்கள் என்று கூறியுள்ளார். தற்போது அவரது இந்த பதிலடி பலரையும் கவர்ந்தது மட்டுமில்லாமல் வைரலாகியும் வருகிறது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Eid Mubarak ? @mehussain_7 Munadi lam Na en friends kitta briyani kepen Ramzan ku ? ipo ellarum enkitta briyani kekaranga ? ? Oreyyy Nagaichuvaiya iruku po ?? #happyramzan #eidmubarak

A post shared by Mani Megalai (@iammanimegalai) on

Step2: Place in ads Display sections

unicc