பொங்கல் பந்தயத்தில் இணைந்த விஜய் சேதுபதியின் பாலிவுட் திரைப்படம்! பட்டைய கிளப்ப போவது யார்?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள பாலிவுட் திரைப்படமான மெரி கிறிஸ்துமஸ் படம் வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது

பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகை என்றாலே வருடம்தோறும் பல நல்ல படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், தமிழில் இந்த ஆண்டு (2023) தீபாவளி பாண்டிகையை ஜப்பான், ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்எல், ரெய்டு ஆகிய 3 திரைப்படங்கள் திரையரங்குகளில்  வெளியாகி மூன்றுமே நல்ல வரவேற்பை பெற்றது.

தீபாவளி பண்டிகையை தொடர்ந்து அடுத்ததாக அடுத்த ஆண்டு (2024) பொங்கல் பண்டிகை வரவிருக்கிறது. பொங்கலை முன்னிட்டு சில தமிழ் திரைப்படங்கள் வெளியாகவிருக்கும் நிலையில், அந்த லிஸ்டில் புதியதாக ஒரு திரைப்படம் இணைந்துள்ளது. அது வேற யாரும் இல்லை. தமிழ் சினிமா முதல் பாலிவுட் சினிமா வரை வில்லனாக ஒரு கலக்கு கலக்கி வரும் நம்ம விஜய் சேதுபதி திரைப்படம் தான்.

இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் இணைந்து நடிக்கும் திரைப்படம் மெரி கிறிஸ்துமஸ். தற்போது இந்தப் படத்தின் இறுதிக் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இபடம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, இந்த திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 12ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கெனவே பொங்கல் பண்டிகையை பல படங்கள் குறி வைத்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, படம்  பெயர் மெரி கிறிஸ்துமஸ் என்று வைக்கப்பட்டுள்ளது கடந்த ஆண்டே கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதர்வா நடிக்கும் பிரமாண்ட புது படம்! இயக்குனர் யார் தெரியுமா?

பின்னர் சில காரணங்களால், இந்தாண்டு டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதுவும், சரியில்லை என்று, டிசம்பர் 8ஆம் தேதி வெளியாகும் என கடந்த மாதம் படக்குழு அறிவித்தன. இப்படி அப்போது இப்பொது என ரிலீஸ் தேதியை மாற்றி கொண்டிருக்கும்  படக்குழு தற்போது மீண்டும் மாற்றியுள்ளது.

அதன்படி, பொங்கல் பண்டிகை முன்னிட்டு 12ம் தேதி வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே சியான் விக்ரமின் தங்கலான், நடிகர் சிவகார்த்திகேயன் அயலான், நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் லால்சலாம் திரைப்படம் மற்றும் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் 3 பாகங்களாக வெளியாகி ஹிட் ஆன அரண்மனை படத்தின் 4ம் பாகமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.