,
GOAT Update

விஜய் பிறந்தநாள் ட்ரீட்!! கோட் படத்தின் புது வீடியோ வெளியீடு!

By

விஜய்: நடிகர் விஜயின் 50 -வது பிறந்தநாளை முன்னிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்து கொண்டிருக்கும் கோட் படத்திற்கான அப்டேட்டுகளை தொடர்ச்சியாக தயாரிப்பு நிறுவனம் கொடுத்து வருவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

முதல் அப்டேட்டாக கோட் படத்தின் 2-வது பாடலான ‘சின்ன சின்ன கண்கள்’ என்ற  பாடல் நாளை மாலை 6:00 மணிக்கு வெளியாகும் என அறிவித்திருந்தது. அந்த பாடலை விஜய் பாடி உள்ளதாகவும், அவருடன் மறைந்த பாடகி இளையராஜாவின் மகளான பவதாரணியின் குரல் ஏஐ டெக்னாலஜி (AI Technology) மூலம் கொண்டுவரப்பட்டு அந்த பாட்டில் இடம் பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

மேலும், பாடல் மட்டுமின்றி மற்றொரு அப்டேட்டும் கொடுக்கிறோம் என்று தயாரிப்பு நிறுவனம் நல்லிரவு 12:01 மணிக்கு கோட் படத்தின் புதிய அப்டேட் வெளியாகிறது என முன்னதாக அறிவித்திருந்தது.

அதன்படி தற்போது அந்த அப்டேட் ரெடியாகி உள்ளது அந்த அப்டேட் வேற எதுவும் இல்லை விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு கோட் படத்தை வைத்து ஒரு மினி டீசரை எடிட் செய்து பட குழு வெளியிட்டுள்ளது.

இந்த டீசரில் வரும் இசையும் விஜயின் முகமும் பார்ப்பதற்கு மிகவும் அட்டகாசமாக இருப்பதால் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. விஜய் நடித்து வெங்கட் பிரபு இயக்கி வரும் இந்த கோட் படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu Media @2023