வீடியோ – பிறந்து 18மாதமேயான KGF பட ஹீரோவின் மகள் என்ன செய்தார் என்று பாருங்கள்.!

KGF பட ஹீரோவின் 18 மாதமான மகள் தனது தம்பியை கொஞ்சும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

கன்னட சினிமாயுலகம் உச்சத்தில் எட்டியதற்கு முக்கிய காரணமாக கே. ஜி. எஃப் சாப்டர் 1 படத்தை கூறலாம். இந்த படத்தின் மூலம் பிரபலமானவர் தான் கன்னட நடிகரான யாஷ். பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படம் உலகம் முழுவதும் சுமார் ரூ. 215 கோடிக்களுக்கு வசூல் செய்து சாதனை படைத்தது மட்டுமில்லாமல் டிஜிட்டலில் அதிகம் பேர் பார்த்த படமாகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் அங்கேயும் மிகப் பெரும் சாதனையும் படைத்தது. யாஷ் தற்போது கே. ஜி. எஃப் சாப்டர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் பிரசாந்த் நீல் இயக்குகிறார். இந்தப் படத்தை அக்டோபர் மாதத்தில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

நடிகர் யாஷ் மனைவி ராதிகா பண்டிட்டை 2016ல் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2018 டிசம்பரில் அய்ரா என்ற பெண் குழந்தை பிறந்தது. அதனையடுத்து 2019ல் ஆயுஷ் என்ற ஆண் குழந்தை பிறந்தது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தற்போது ராதிகா பண்டிட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 18 வயதான அய்ரா தனது தம்பி பாப்பாவை மடியில் வைத்து தட்டி கொடுக்கும் வீடியோவாகும்.அதனுடன் தனது மகளுக்கு இன்றுடன் 18மாதம் ஆவதாகவும், என்னுடைய மகள் உங்களை சிரிக்க வைத்திருப்பார் என்று நம்புகிறேன் என்றும் பதிவிட்டுள்ளார். தற்போது யாஷின் மகளின் இந்த கியூட்டான வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

And just like that our baby girl turns 18months today!! ???? Hope our lil baby sitter made u smile!! P.S : I am sure she is imitating my Dad ???? #nimmaRP #radhikapandit

A post shared by Radhika Pandit (@iamradhikapandit) on