சியான் விக்ரமுடன் வாணி போஜன்.! வைரலாகும் புகைப்படங்கள்.!

விக்ரமுடன் நடிகை வாணி போஜன் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் சியான் 60. இந்த படத்தில் விக்ரமுடன் அவரது மகன் துருவ் விக்ரமும் நடித்துள்ளார். மேலும் பாபி சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார்.

இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 20-ஆம் தேதி டைட்டிலுடன் வெளியாகும் என்று நேற்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இதனால் விக்ரம் ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், தற்போது சியான் 60 படத்தின் படப்பிடிப்பு விக்ரமுடன் நடிகை வாணி போஜன் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

vikram

vikram

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.