வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்-ஐ தொடர்ந்து வந்தே மெட்ரோ அறிமுகம்.!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்-ஐ தொடர்ந்து, இந்தியாவில் உருவாக்கப்படும் வந்தே மெட்ரோவை இந்திய ரயில்வே 2023 இல் அறிமுகப்படுத்துகிறது.

பல வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வெற்றிகரமான ஓட்டத்திற்கு பிறகு, இந்திய ரயில்வே வந்தே மெட்ரோவை அடுத்த அண்டு 2023 டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்த இருக்கிறது. நடுத்தர மற்றும் ஏழை மக்களின் தேவையை கருத்தில் கொண்டு இந்த வந்தே மெட்ரோ ரயில்கள் உருவாக்கப்பட்டு வருவதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் வைஷ்ணவ் கூறினார்.

இந்திய ரயில்வே, வந்தே மெட்ரோ ரயிலை தயாரித்து வருகிறது, இந்த ரயில்கள் 1950 மற்றும் 60 களில் தயாரிக்கப்பட்ட ரயில்களுக்கு மாற்றாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயில்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் முதல் ஹைட்ரஜன் ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.

வடிவமைப்பு பணிகள் ஏற்கனவே நடந்து வருகிறது என்றும் டிசம்பர் 2023 க்குள் நாட்டில் முதல் ஹைட்ரஜன் ரயிலை வெளியிட முடியும்  என்றும் மத்திய அமைச்சர் வைஷ்ணவ் மேலும் கூறினார். வந்தே பாரத்-3 எக்ஸ்பிரஸ் ரயில்கள், ஸ்லீப்பர் கிளாஸுடன் வடிவமைக்கப்பட்டு வருவதாகவும், இந்த ரயில்கள் நீண்ட பயணத்திற்கும் பயன்படுத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

author avatar
Muthu Kumar

Leave a Comment