இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ட்வீட்டர் ஹேஷ்டேக்கில் வலிமை முதலிடம்.!

இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ட்வீட்டர் ஹேஷ்டேக்கில் வலிமை அப்டேட் முதலிடத்தில் இடம்பெற்றுள்ளது. 

டிவிட்டரில் ஆண்டுதோறும் “Hashtag Day” கொண்டாடப்படும். கடந்த 2007 ஆம் ஆண்டு ட்விட்டர் தொடங்கியதில் இருந்து, இது 14வது ஆண்டு விழா. ஆண்டுதோறும் முதல் பாதி, அதாவது ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை கணக்கில் எடுத்துக்கொண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட ட்வீட்டர் ஹேஷ்டேக் பட்டியலை வெளியிடுகிறது. 

அந்த வகையில், இன்று இந்தாண்டு முதல் பாதியில் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட 10 ட்வீட்டர் ஹேஷ்டேக் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில்  முதலிடத்தை அஜித்குமாரின் “வலிமை அப்டேட்” என்ற ஹேஷ்டேக் பிடித்துள்ளது.

இரண்டாவது இடத்தில் விஜயின் மாஸ்டர் பிடித்துள்ளது.  மூன்றாவது இடத்தில் சர்க்காரு வரி பாட்டா 4-வது இடத்தில் அஜித்குமார் ஆகிய ஹேஷ்டேக் உள்ளன.  ‘தளபதி 65’ ஹேஷ்டேக் 5-ம் இடத்திலும் உள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.